ஆசிய நாடுகளில் இந்தியப் பண்பாடு பரவுதல்
மத்திய ஆசியா
கிறித்துவ சகாப்தத்தின் தொடக்க நூற்றாண்டுகளில் மத்திய ஆசியப் பகுதி இந்தியப் பண்பாட்டின் மையமாகத் திகழ்ந்தது. ஆப்கானிஸ்தானத்தின் கிழக்குப் பகுதியில் ஏராளமான பண்பாட்டு சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கோடான், காஷ்கர் போன்ற இடங்கள் இந்திய பண்பாட்டின் மையங்களாகும். அங்கு, பல வடமொழி நூல்களும், புத்தசமய மடாலயங்களும் கண்டெடுக்கப்பட்டன. அப்பகுதியில் எட்டாம் நூற்றாண்டுவரை இந்தியப் பண்பாட்டின் தாக்கம் தொடர்ந்து காணப்பட்டது. மத்திய ஆசியா வழியாக சீனா, திபெத் போன்ற நாடுகளுக்கும் இந்தியப் பண்பாடு பரவியது.
இந்தியாவும் சீனாவும்
மத்திய ஆசியா வழியாக நிலவழித்தடமும், பர்மா வழியாக கடல் வழித்தடமும் இந்தியப் பண்பாடு சீனாவுக்குச் செல்ல பேருதவியாக இருந்தன. கி.பி. முதலாம் நூற்றாண்டில் புத்த சமயம் சீனாவில் பரவியது. பாஹியான், யுவான் சுவாங் உள்ளிட்ட பல்வேறு சீனப் பயணிகள் இந்தியாவிற்கு வந்தனர். மறுபுறம் குணபத்ரர், வஜ்ரபோதி, தர்மதேவர், தர்மகுப்தர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான புத்த சமயத் துறவிகள் இந்தியாவிலிருந்து சீனாவுக்கு சென்றனர். சீனப் பேரரசர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்திய அறிஞர்கள் வடமொழி நூல்களை மொழி பெயர்த்தனர். மங்கோலியர்கள் சீனாவில் தங்களது பேரரசை ஏற்படுத்திய பதின்மூன்றாம் நூற்றாண்டில்கூட சீனாவுடனான இந்த தொடர்பு நீடித்தது. சீனக் கலையிலும் இந்தியக் கலையின் தாக்கத்தைக் காணலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆசிய நாடுகளில் இந்தியப் பண்பாடு பரவுதல் , இந்திய, வரலாறு, இந்தியப், பண்பாடு, மத்திய, ஆசியா, பண்பாட்டின், வழியாக, ஆசிய, இந்தியா, பரவுதல், நாடுகளில், புத்த, சீனப், சீனாவில், பரவியது, உள்ளிட்ட, தாக்கம், பண்டைய, ஆசியாவின், காணப்பட்டது, வடமொழி