இராஷ்டிரகூடர்கள்
இராஷ்டிரகூடர்கள் வடமொழியை பெரிதும் ஆதரித்தனர். இராஷ்டிரகூட அரசவையில் பல அறிஞர்கள் இருந்தனர். நலிசம்பு என்ற நூலை திருவிக்ரமன் எழுதினார். மூன்றாம் கிருஷ்ணரது ஆட்சிக் காலத்தில் ஹெளயுதா என்பவர் கவிரஹஸ்யம் என்ற நூலைப் படைத்தார். இராஷ்டிரகூடர்களின் அரவணைப்பினால் சமணசமய இலக்கியங்களும் வளர்ச்சி பெற்றன. சமணரான முதலாம் அமோகவர்ஷர் பல சமண அறிஞர்களை ஆதரித்தார். அவரது ஆசிரியரான ஜீனசேனர் பார்கவநாதரின் வாழ்க்கை வரலாற்றை செய்யுள் நடையில் 'பார்சவபூதயா' என்ற தலைப்பில் எழுதினார். பல்வேறு சமண முனிவர்களின் வாழ்க்கை வரலாறுகளைத் தொகுத்து ஆதிபுராணம் என்ற தலைப்பில் குணபத்ரர் என்பவர் எழுதினார். அமோக விருத்தி என்ற இலக்கண நூலை சாகதாயனா என்பவர் படைத்தார். வீராச்சாரியார் என்ற அக்கால கணிதமேதை 'கணிதசாரம்' என்ற நூலை எழுதினார். இராஷ்டிரகூடர்களின் ஆட்சிக்காலத்தில் கன்னட இலக்கியமும் வளர்ச்சி கண்டது. அமோகவர்ஷர் இயற்றிய கவிராஜமார்க்கம் கன்னடமொழியில் எழுதப்பட்ட முதல் கவிதை நூலாகும். பம்பா என்பவர் கன்னடமொழிக் கவிஞர்களில் தலைசிறந்தவர். அவரது புகழ்பெற்ற நூல் 'விக்ரமசேனவிஜயம்'. பொன்னா என்ற மற்றொரு கன்னடக் கவிஞர் 'சாந்திபூரணா' என்ற நூலை எழுதினார்.
கலை, கட்டிடக் கலை
எல்லோரா கைலாசர் கோயில் |
பம்பாய்க்கு அருகிலுள்ள தீவு எலிபான்டா. முதலில் அது ஸ்ரீபுரி என்று அழைக்கப்பட்டது. பெரிய யானையின் சிற்பத்தை கண்ட போர்ச்சுகீசியர்கள் அதற்கு எலிபான்டா என்ற பெயரிட்டு அழைத்தனர். அங்கு இராஷ்டிரகூடர்களின் கலை அதன் உச்ச கட்டத்தை எட்டியது எனலாம். எல்லோரா, எலிபான்டா சிற்பங்களுக்கிடையே ஒற்றுமையைக் காணமுடிகிறது. அவற்றை ஒரே குழுவைச் சேர்ந்த சிற்பிகள் உருவாக்கியிருக்க வேண்டும். கருவறைக்குள் நுழைவுமுன் உள்ள துவாரபாலகர் சிலை பிரமாண்ட வடிவிலானது. சுற்றுச் சுவர்களில் நடராஜர், கங்காதரர், அர்த்த நாரிஸ்வரர், சோமஸ்கந்தர் என்று சிவனின் பல வடிவங்கள் தீட்டப்பட்டுள்ளன. திருமூர்த்தி உருவம் மிகப்பெரியது. ஆறு மீட்டர் உயரமுடையது. படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழில்களையும் செய்யும் சிவனை அது பிரதிபலிப்பதாகக் கூறப்படுகிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இராஷ்டிரகூடர்கள் , வரலாறு, எழுதினார், இராஷ்டிரகூடர்கள், என்பவர், இராஷ்டிரகூடர்களின், கைலாசர், நூலை, இந்திய, கொண்ட, எல்லோரா, கோயில், எலிபான்டா, உள்ள, சிற்பம், சுவர்களில், எனலாம், செதுக்கப்பட்டுள்ளன, இக்கோயில், வாழ்க்கை, வளர்ச்சி, படைத்தார், காலத்தில், இந்தியா, முதலாம், அமோகவர்ஷர், புகழ்பெற்ற, தலைப்பில், அவரது, கட்டிடக்