இராஷ்டிரகூடர்கள்
கன்னட இனத்தைச் சேர்ந்த இராஷ்டிரகூடர்களின் தாய்மொழி கன்னடமொழியாகும். இராஷ்டிரகூட மரபைத் தோற்றுவித்தவர் தந்தி துர்க்கர். கூர்ஜரர்களை முறியடித்து அவர்களிடமிருந்து மாளவத்தை தந்தி துர்க்கர் கைப்பற்றினார். பின்னர், இரண்டாம் கீர்த்தி வர்மனை முறியடித்து சாளுக்கிய நாட்டை அவர் கைப்பற்றினார். இவ்வாறு இராஷ்டிரகூடர்கள் தக்காணத்தில் முதன்மை அரசை உருவாக்கினர்.
அடுத்து ஆட்சிக்கு வந்த முதலாம் கிருஷ்ணர் ஒரு பெரும் வெற்றி வீரர். கங்கர்களையும் வெங்கிச் சாளுக்கியரையும் அவர் முறியடித்தார். எல்லோராவில் பெரிய பாறையைக் குடைந்து ஒரே கல்லாலான கைலாசர் ஆலயத்தை அவர் அமைத்தார். இராஷ்டிராகூடர்களின் அடுத்த சிறந்த அரசர் மூன்றாம் கோவிந்தர். வடஇந்திய அரசுகளுக்கெதிராக அவர் பல வெற்றிகளைப் பெற்றார்.
![]() |
இராஷ்டிரகூடர்கள் அரசு |
அமோகவர்ஷரின் வழித் தோன்றல்களில் குறிப்பிடத்தக்கவர் மூன்றாம் கிருஷ்ணர் (கி.பி. 936 - 968). அவரது போர்வெற்றிகள் குறிப்பிடத்தக்கவை. சோழர்களுக்கெதிராக அவர் படையெடுத்து தக்கோலம் என்ற இடத்தில் சோழப்படைகளை முறியடித்தார். மேலும் தெற்கு நோக்கி முன்னேறிய அவர் தஞ்சாவூரைக் கைப்பற்றினார். ராமேஸ்வரம் வரை சென்ற அவர் அதனை சிறிது காலம் தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். தாம் கைப்பற்றிய பகுதிகளில் பல கோயில்களையும் அவர் கட்டுவித்தார். இராமேஸ்வரத்தில் கிருஷ்ணேஸ்வரர் ஆலயம் அவரால் கட்டப்பட்டது. காஞ்சி உள்ளிட்ட தொண்டை மண்டலம் அவர் ஆட்சிக் காலம் முழுவதும் இராஷ்டிரகூடர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. அவரது மறைவுக்குப் பிறகு இராஷ்டிரகூடர்கள் விழ்ச்சியடைந்தனர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இராஷ்டிரகூடர்கள் , அவர், இராஷ்டிரகூடர்கள், வரலாறு, அவரது, இந்திய, கைப்பற்றினார், முதலாம், இராஷ்டிரகூடர்களின், கட்டுப்பாட்டில், முறியடித்தார், மூன்றாம், கிருஷ்ணர், அமோகவர்ஷர், காலம், பின்னர், கன்னட, இந்தியா, தந்தி, துர்க்கர், முறியடித்து, வந்த