பல்லவர்கள்
பல்லவர் காலத்தில் தமிழ்ச் சமுதாயம் பெரும் மாற்றங்களை சந்தித்தது. ஜாதிமுறை கடுமையாகப் பின்பற்றப்பட்டது. பிராமணர்கள் சமுதாயத்தின் மிக உயர்ந்த இடத்தில் இருந்தனர். அவர்களுக்கு அரசர்களும், உயர்குடியினரும் நிலக் கொடைகளை வழங்கினர். கோயில்களை பராமரிக்கும் பொறுப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டது. பல்லவர் காலத்தில் வைணவமும் சைவமும் தழைத்தன. மாறாக, புத்தசமயமும், சமண சமயமும் வீழ்ச்சியடைந்தன. சைவ நாயன்மார்களும், வைணவ ஆழ்வார்களும், சைவ, வைணவ சமயங்களின் வளர்ச்சிக்கு பாடுபட்டனர். இதற்கு பக்தி இயக்கம் என்று பெயர். தமிழ்மொழியில் அவர்கள் பக்திப் பாடல்களை இயற்றிப் பாடினர். பக்தியின் சிறப்பை இப்பாடல்கள் வெளிப்படுத்தின. பல்லவ அரசர்களால் கட்டப்பட்ட ஆலயங்களும் இவ்விரு சமயங்களின் வளர்ச்சிக்கு மேலும் ஊக்கமளித்தன.
கல்வி, இலக்கியம்
பல்லவர்கள் கற்றோரைப் போற்றி ஆதரித்தனர். அவர்களது தலைநகரான காஞ்சி ஒரு கல்வி நகரமாகும். காஞ்சிக் கடிகை மிகவும் சிறப்பு வாய்ந்த கல்விக் கூடமாகும். இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்தும் அயல்நாடுகளிலிருந்தும் மாணவர்கள் காஞ்சி கடிகைக்கு வந்து கல்வி பயின்றனர். கடம்ப குலத்தின் நிறுவனரான மயூரசர்மன் காஞ்சிக்கு வந்து வேதங்களைக் கற்றான். திங்கநாகர் என்ற புத்த அறிஞர் கல்வி பயிலுவதற்காக காஞ்சி வந்தார். நாளந்தா பல்கலைக்கழகத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்த தர்மபாலர் காஞ்சி நகரத்தைச் சேர்ந்தவர். சிறந்த வடமொழிப் புலவரான பாரவி சிம்மவிஷ்ணு ஆட்சிக் காலத்தில் வாழ்ந்தவர். மற்றொரு வடமொழி ஆசிரியரான தண்டின் இரண்டாம் நரசிம்மவர்மன் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்தவர். முதலாம் மகேந்திரவர்மன் மத்தவிலாச பிரகாசனம் என்ற வடமொழி நாடகத்தை இயற்றினார். தமிழ் இலக்கியமும் இக்காலத்தில் வளர்ச்சியடைந்தது. நாயன்மார்களும், ஆழ்வார்களும் பக்திப் பாடல்களை இனிய தமிழிலேயே இயற்றி இசைத்தனர். நாயன்மார்கள் இயற்றிய தேவாரமும், ஆழ்வார்கள் இயற்றிய நாலாயிர திவ்ய பிரபந்தமும் பல்லலர்கால பக்தி இயக்கியங்களாகும். இரண்டாம் நந்திவர்மனால் ஆதரிக்கப்பட்ட பெருந்தேவனார் மகாபாரத்தை பாரத வெண்பா என்ற பெயரில் தமிழில் மொழியாக்கம் செய்தார். நந்திக் கலம்பகம் மற்றொரு முக்கிய தமிழ் இலக்கியம். ஆனால், இதனை இயற்றியவர் பெயர் தெரியவில்லை. இசையும் நடனமும் கூட இக்காலத்தில் செழித்து வளர்ந்தது.
பல்லவர் கால கலை, கட்டிடக் கலை
கடற்கரைக் கோயில் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பல்லவர்கள் , வரலாறு, பல்லவர்கள், பல்லவர், காலத்தில், கோயில், கல்வி, இந்திய, காஞ்சி, வாழ்ந்தவர், மற்றொரு, ஆட்சிக், வந்து, வடமொழி, இயற்றிய, பல்லவர்கால, கலையில், தொடங்கியது, கட்டிடக், தமிழ், இக்காலத்தில், இரண்டாம், பக்திப், பொறுப்பு, நாயன்மார்களும், அவர்களுக்கு, சமுதாயம், இந்தியாவின், இந்தியா, வைணவ, ஆழ்வார்களும், பெயர், பாடல்களை, பக்தி, வளர்ச்சிக்கு, சமயங்களின், இலக்கியம்