பேரரசுச் சோழர்கள்
சோழர் காலத்தில் ஜாதிமுறை பரவலாகப் பின்பற்றப்பட்டது. பிராமணர்களும், ஷத்திரியரும் பல்வேறு சலுகைகளைப் பெற்றிருந்தனர். சோழர் காலத்தின் பிற்பகுதியைச் சேர்ந்த கல்வெட்டுக்களில் வலங்கை, இடங்கை சாதிப் பிரிவுகள் பற்றி குறிப்புகள் காணப்படுகின்றன. இருப்பினும், பல்வேறு ஜாதியினருக்கிடையே ஒற்றுமை காணப்பட்டது. பல்வேறு கிளை ஜாதிகளும் இருந்தன. மகளிர் நிலையில் முன்னேற்றம் ஏதுமில்லை. அரச குடும்பத்தாரிடையே 'சதி' என்ற உடன்கட்டையேறும் வழக்கம் இருந்தது. கோயில்களுடன் பிணைக்கப்பட்டிருந்த நாட்டிய மகளிர் அடங்கிய தேவதாசி முறை சோழர் காலத்தில்தான் தோன்றி வளர்ந்தது.
![]() |
சோழர்கால நாணயங்கள் |
கல்வி, இலக்கியம்
சோழர் காலத்தில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. கோயில்கள், மடங்கள் தவிர பல்வேறு கல்விக் கூடங்களும் கல்வியைப் பரப்பி வந்தன. எண்ணாயிரம், திருமுக்கூடல், திருபுவனை ஆகிய இடங்களில் உள்ள சோழர்கால கல்வெட்டுகள் அங்கு செயல்பட்டுவந்த கல்லூரிகள் பற்றிய விவரங்களை எடுத்துரைக்கின்றன. வேதங்கள், இதிகாசங்கள் தவிர, கணிதம், மருத்துவம் போன்றவையும் இந்த கல்விக் கூடங்களில் பயிற்றுவிக்கப்பட்டன. இந்த நிறுவனங்களை நடத்துவதற்கு ஏராளமான நிலக் கொடைகள் வழங்கப்பட்டிருந்தன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பேரரசுச் சோழர்கள் , வரலாறு, சோழர், காலத்தில், பல்வேறு, இந்திய, தொழில், பேரரசுச், சோழர்கள், கோயில்கள், கல்விக், தவிர, நன்கு, சோழர்கால, பொருளாதார, மகளிர், இந்தியா, நாணயங்கள், ஏராளமான