பேரரசுச் சோழர்கள்
6. பல்வேறு கலகங்களை ஒடுக்கி, சோழப் பேரரசு சீர்குலையாதவாறு அவர் பார்த்துக் கொண்டார்.
முதலாம் ராஜேந்திரன் மறைந்தபோது சோழப் பேரரசு அதன் உச்ச கட்டத்தை எட்டியிருந்தது. துங்கபத்திரை வடக்கு எல்லையாக இருந்தது. பாண்டிய, கேரள, மைசூர்ப் பகுதிகள், இலங்கை ஆகியவற்றை உள்ளடக்கியதாக சோழப் பேரரசு இருந்தது. தனது புதல்வி அம்மங்காதேவியை வெங்கிச் சாளுக்கிய இளவரசனுக்கு மணமுடித்துக் கொடுத்த முதலாம் ராஜேந்திரன் தனது தந்தை ஏற்படுத்திச் சென்ற மணஉறவுகளை தொடர்ந்து கடைப்பிடித்தார். முடிகொண்டான், கங்கை கொண்டான், கடாரம்கொண்டான், பண்டிதசோழன் என பல்வேறு விருதுப் பெயர்களையும் முதலாம் ராஜேந்திரன் சூட்டிக் கொண்டார். தந்தையைப் போலவே சிறந்த சிவபக்தனாகவும் அவர் திகழ்ந்தார். புதிய தலைநகரான கங்கைகொண்ட சோழபுரத்தில் சிவாலயம் ஒன்றையும் எழுப்பினார். அந்த ஆலயத்துக்கு தாராளமாக மானியங்களை அளித்தார். சிதம்பரம் நடராஜர் ஆலயத்திற்கும் கொடைகளை வழங்கினார். வைணவ, புத்த சமயப் பிரிவுகளிடமும் அவர் சகிப்புத் தன்மையுடன் நடந்து கொண்டார்.
முதலாம் ராஜேந்திரனுக்குப் பிறகு, முதலாம் குலோத்தங்கன், மூன்றாம் குலோத்துங்கன் போன்ற ஆட்சியாளர்கள் காலத்திலும் சோழப் பேரரசு புகழ் பெற்று விளங்கியது. முதலாம் ராஜேந்திரனின் மகள் அம்மங்காதேவியின் வாரிசாக உதித்தவனே முதலாம் குலோத்துங்கன். அவர் சோழப் பேரரசனாக பதவியேற்றதால் வெங்கி நாடும் சோழப் பேரரசுடன் இணைந்தது. ஆனால், அவரது ஆட்சிக் காலத்தில் இலங்கை விடுதலை பெற்றது. பின்னர், வெங்கியும் மைசூரும் மேலைச் சாளுக்கியரால் கைப்பற்றப்பட்டன. முதலாம் குலோத்துங்கன் 72 வணிகர்கள் அடங்கிய தூதுக் குழுவை சீனாவிற்கு அனுப்பி வைத்தார்.
ஸ்ரீவிஜய அரசுடன் நல்லுறவை அவர் மேற்கொண்டிருந்தார். மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சிக் காலத்தில் சோழப் பேரரசு நலிவடையத் தொடங்கியது. காடவராயர்கள் போன்ற குறுநிலத் தலைவர்கள் எழுச்சி பெற்றனர். சோழரின் மேலாண்மைக்கு பாண்டியரின் எழுச்சி பெரிய சவலாயிற்று. இறுதியில் சோழப் பேரரசு வீழ்ச்சியடைந்தது. கடைசி சோழ அரசன் மூன்றாம் ராஜேந்திரனை இரண்டாம் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் முறியடித்தான். சோழ நாடு பாண்டியப் பேரரசுடன் இணைத்துக் கொள்ளப்பட்டது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பேரரசுச் சோழர்கள் , முதலாம், சோழப், வரலாறு, பேரரசு, அவர், ராஜேந்திரன், கொண்டார், இந்திய, குலோத்துங்கன், பேரரசுச், மூன்றாம், பல்வேறு, பேரரசுடன், சோழர்கள், காலத்தில், எழுச்சி, ஆட்சிக், இலங்கை, தனது, இணைத்துக், நோக்கம், இந்தியா, அந்த, இடங்களை, கொண்டான், சூட்டிக்