');
if (iCwidth > 336) {
document.write('');
}else if(iCwidth <=336 && iCwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->
பாதாமி சாளுக்கியர்கள் பிராமணீய இந்துக்கள், இருப்பினும் அவர்கள் பிற சமயத்தவரையும் மதித்து நடந்தனர். வேத சமய சடங்குகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. சாளுக்கிய மரபைத் தோற்றுவித்த முதலாம் புலிகேசி குதிரைவேள்வியை செய்தார். விஷ்ணு, சிவன் போன்ற கடவுளருக்கு ஏராளமான கோயில்கள் அவர்களது காலத்தில் கட்டப்பட்டன. மேற்குத் தக்காணத்தில் புத்த சமயம் வீழ்ச்சியடைந்து வந்தது என்று யுவான் சுவாங் தமது பயணக்குறிப்பில் கூறியுள்ளார். ஆனால், இப்பகுதியில் சமண சமயம் நிலையான வளர்ச்சியைப் பெற்று வந்தது. இரண்டாம் புலிகேசியின் அவைப் புலவரும் ஐஹோலே கல்வெட்டைத் தொகுத்தவருமான ரவிகீர்த்தி ஒரு சமணர்.
கலை, கட்டிடக் கலை
|
அஜந்தா குகைக்கோயில் |
சாளுக்கியர்கள் கலை வளர்ச்சிக்கு பெரிதும் பங்காற்றியுள்ளனர். கட்டுமானக் கோயில்களை கட்டுவதற்கு அவர்கள் வேசர கலைப்பாணியை பின்பற்றினர். இருப்பினும், இராஷ்டிர கூடர் மற்றும் ஹோய்சளர் ஆட்சிக் காலத்தில்தான் வேசர கலைப்பாணி அதன் உச்ச கட்டத்தை எட்டியது. ஐஹோலே, பாதாமி, பட்டாடக்கல் ஆகிய இடங்களில் சாளுக்கியரின் கட்டுமானக் கோயில்களைக் காணலாம். சாளுக்கியர் காலத்தில் குடைவரைக் கோயில்களும் சிறப்பு பெற்றிருந்தன. அஜந்தா, எல்லோரா, நாசிக் ஆகிய இடங்களில் சாளுக்கியரின் குடைவரைக் கோயில்களைக் காணலாம். பாதாமி குகைக் கோயில் மற்றும் அஜந்தா குகைகளில் சாளுக்கியர் கால ஓவியங்களைக் காணமுடிகிறது. இரண்டாம் புலிகேசி ஒரு பாரசீகத்தூதுக் குழுவிற்கு வரவேற்பு அளிப்பது போன்று அஜந்தா ஓவியத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
சாளுக்கியர் கால கோயில்களை இரண்டு நிலைகளாகப் பிரிக்கலாம். ஐஹோலே, பாதாமி ஆகிய இடங்களிலுள்ள கோயில்கள் முதல்நிலை. ஐஹோலேவில் உள்ள எழுபது கோயில்களில் நான்கு மட்டும் சிறப்பாக குறிக்கப்பட வேண்டியவை :
1 லட்கான் கோயில் - சமதளக் கூரையுடன் கூடிய இக்கோயிலில் தூண்களையுடைய மண்டபம் உள்ளது.
2 ஒரு புத்த சைத்தியத்தைப் போல தோற்றமளிக்கும் துர்க்கை கோயில்
3 ஹூச்சிமல்லி குடி கோயில்
4. மெகுதி என்ற இடத்திலுள்ள சமணக் கோயில்
|
பாதாமி குகைக்கோயில் |
பாதாமியில் உள்ள கோயில்களில் முக்தீஸ்வரர் கோயிலும், மேலகுட்டி சிவன் கோயிலும் அவற்றின் கட்டிடக் கலைக்கும் அழகிற்குப் பெயர் பெற்றவை. ஒரேயிடத்திலுள்ள நான்கு குடைவரைக் கோயில்கள் அவற்றின் கலைநயமுள்ள வேலைப்பாட்டிற்கு எடுத்துக்காட்டு. அவற்றின் சுவர்களும் தூண்கள் தாங்கும் மண்டபங்களும் கடவுளர் மற்றும் மனிதர்களின் அழகான சிற்பங்களைக் கொண்டு அழகூட்டப்பட்டுள்ளன.
|
பட்டாடக்கல் விருப்பாட்சர் கோயில் |
இரண்டாவது நிலை, பட்டாடக்கல் என்ற இடத்தில் காணப்படும் கோயில்கள், இங்கு பத்து கோயில்கள் உள்ளன. நான்கு வடஇந்திய கலைப்பாணியில் அமைந்துள்ளன. எஞ்சிய ஆறு திராவிட கலைப்பாணியிலானவை. வட இந்திய கலைப்பாணியில் அமைக்கப்பட்டுள்ள பாபநாதர் கோயில் குறிப்பிடத்தக்கது. திராவிடக் கலைப் பாணியில் அமைந்த சங்கமேஸ்வரர் கோயில் மற்றும் விருப்பாட்சர் ஆலயம் இரண்டும் புகழ் பெற்றவை. காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தைப் போன்றே விருப்பாட்சர் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. இரண்டாம் விக்ரமாதித்தனின் அரசிகளில் ஒருவரால் இது கட்டுவிக்கப்பட்டது. காஞ்சியிலிருந்து சிற்பிகள் வரவழைக்கப்பட்டு இக்கோயில் கட்டப்பட்டது என்று கருதப்படுகிறது.
');
if (iCwidth > 336) {
document.write('');
}else if(iCwidth <=336 && iCwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->