இந்திய சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்
');
if (iCMwidth > 568) {
document.write('');
}else if(iCMwidth <=568 && iCMwidth >= 336 ){
document.write('');
}else if(iCMwidth <=336 && iCMwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->
');
if (iCwidth > 336) {
document.write('');
}else if(iCwidth <=336 && iCwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->
பிரம்ம ஞான சபை
1875 ஆம் ஆண்டு ரஷ்யாவைச் சேர்ந்த பிளாவட்ஸ்கி அம்மையார் மற்றும் அமெரிக்கா கர்னல் ஹென்றி ஸ்டீல் ஆல்காட் என்ற இருவராலும் நியுயார்க்கில் (அமெரிக்கா) பிரம்ம ஞான சபை நிறுவப்பட்டது.
|
பிளாவட்ஸ்கி |
இன, நிற, சமயப்பாகுபாடுகள் இன்றி உலக சகோதரத்துவத்தை ஏற்படுத்துவதும் பண்டைய சமயம் மற்றும் தத்துவங்களை ஆய்வு செய்வதும் அவர்களது முக்கிய நோக்கங்களாகும். இந்தியாவிற்கு வந்த அவர்கள் 1882ல் சென்னை, அடையாற்றில் தங்களது தலைமையிடத்தை நிறுவினர். பின்னர் 1893ல் திருமதி. அன்னி பெசன்ட் அம்மையார் இந்தியாவிற்கு வந்து ஆல்காட்டின் மறைவுக்குப்பின் இச்சபையின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். திருமதி. அன்னி பெசன்ட் மதன் மோகன் மாளவியாவுடன் இணைந்து பனாரசில் மத்திய இந்துப்பள்ளியை நிறுவினார். பின்னர் அது பனாரஸ் இந்து பல்கலைக்கழகமாக வளர்ச்சி பெற்றது.
பண்டித ஈஸ்வர சந்திர வித்யா சாகர்
|
ஈஸ்வர சந்திர வித்யா சாகர் |
பண்டித ஈஸ்வர சந்திர வித்யா சாகர் ஒரு சிறந்த கல்வியாளர் மனித நேயமிக்கவர், சமூக சீர்திருத்தவாதி. 1820ல் வங்காளத்தில் மிட்னாபூரில் ஒரு கிராமத்தில் பிறந்தார். நன்கு படித்து வில்லியம் கோட்டை கல்லூரியில் வங்காள மொழித் துறையின் தலைமைப் பண்டிதரானார். இந்திய சமுதாயத்தில் கல்வியைப் பரப்புவதன் மூலமாகவே சீர்திருத்தம் கொண்டுவர முடியும் என்று அவர் கருதினார். பெண்களுக்காக பல பள்ளிகளை நிறுவினார். பெதூன் பள்ளியை நிறுவ ஜெ.டி. பெதூன் என்பவருக்கு உறுதுணையாக இருந்தார். கல்கத்தாவில் மெட்ரோ போலிடன் நிறுவனத்தை ஏற்படுத்தினார். குழந்தை திருமணத்தை கடுமையாக எதிர்த்த அவர் விதவைகள் மறுமணத்தை ஆதரித்தார். 1856 ஆம் ஆண்டு விதவைகள் மறுமணச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. கல்வியைப் பரப்புவதற்கு அவர் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டும் விதத்தில் அவருக்கு வித்யா சாகர் என்ற பட்டம் வழங்கப்பட்டது.
');
if (iCwidth > 336) {
document.write('');
}else if(iCwidth <=336 && iCwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்திய சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் , இந்திய, வரலாறு, சாகர், வித்யா, சமூக, ஈஸ்வர, சந்திர, அவர், இயக்கங்கள், சீர்திருத்த, நிறுவினார், பண்டித, விதவைகள், தலைமைப், பெதூன், கல்வியைப், பின்னர், ஆண்டு, பிரம்ம, இந்தியா, பண்டைய, பிளாவட்ஸ்கி, அம்மையார், அன்னி, திருமதி, இந்தியாவிற்கு, அமெரிக்கா, பெசன்ட்