இந்திய சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்
விவியன் டெரோசியோ |
இளம் வங்காள இயக்கத்தை நிறுவியவர் ஹென்றி விவியன் டெரோசியோ ஆவார். 1809ல் கல்கத்தாவில் பிறந்த அவர் கல்கத்தா இந்துக் கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். 1833ல் காலரா நோய் கண்டு இளம் வயதிலேயே இறந்தார். அவரது சீடர்கள் டெரோசியன்கள் என்றும் அவரது இயக்கம் இளம் வங்காள இயக்கம் என்றும் அழைக்கப்பட்டது. பழமையான கண்மூடிப்போன பழக்கவழக்கங்களை இவர்கள் கடுமையாக தாக்கிப் பேசினர். பெண் உரிமை, பெண் கல்வியை பெரிதும் ஆதரித்தனர். உருவ வழிபாடு, ஜாதிமுறை, மூட நம்பிக்கைகள் ஆகியவற்றுக்கு எதிராக பல்வேறு அமைப்புகளை ஏற்படுத்தியும், விவாதங்கள் நடத்தியும் சீர்திருத்தத்தில் ஈடுபட்டனர்.
சுவாமி தயானந்த சரஸ்வதியும் ஆரிய சமாஜமும்
சுவாமி தயானந்த சரஸ்வதி |
பம்பாயில் தோற்றுவிக்கப்பட்ட போதிலும், ஆரிய சமாஜம் பஞ்சாபில் சக்திமிக்க இயக்கமாக வளர்ந்து இந்தியாவின் பல பகுதிகளில் தனது தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆரிய சமாஜம் கல்வி வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டது. 1886ல் முதலாவது தயானந்த ஆங்கிலோ வேத பள்ளி (டி.ஏ.வி) லாகூரில் நிறுவப்பட்டது. பிற்காலத்தில் இந்தியாவின் பிறபகுதிகளில் மேலும் பல பள்ளிகள் தொடங்கப்பட்டன. ஆரிய சமாஜத்தைச் சேர்ந்த லாலாலஐபதி ராய் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானவர்கள் இந்திய விடுதலை இயக்கத்தில் பங்கேற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்திய சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் , இந்திய, அவர், வரலாறு, ஆரிய, தயானந்த, வங்காள, சமூக, அவரது, இளம், சீர்திருத்த, விவியன், இயக்கங்கள், சுவாமி, இந்தியாவின், வழிபாடு, உருவ, சமாஜம், ஜாதிமுறை, சரஸ்வதி, பம்பாயில், பெண், டெரோசியோ, இதழான, முதலாவது, ராய், இந்தியா, தொடங்கினார், 1833ல், என்றும், பிறந்த, ஹென்றி, இயக்கம்