ஹரப்பா நாகரிகம் (The Harappan Civilization)
நகர அமைப்பு
ஹரப்பா பண்பாடு அதன் தனிச்சிறப்பு வாய்ந்த நகர அமைப்புக்கு பெயர் பெற்றதாகும். தெருக்கள் ஒவ்வொன்றும் குறுக்கு நெடுக்காகவும் நேர்கோட்டிலும் அமைந்திருந்தன, ஹரப்பா, மொகஞ்சாதாரோ, காளிபங்கன் போன்ற பெரிய நகரங்களில் மேடான பகுதிகளில் கோட்டைகள் கட்டப்பட்டிருந்தன. கோட்டைகள் ஒவ்வொன்றும் களிமண்கற்களாலான மேடுகள்மீது அமைக்கப்பட்டிருந்தன. கோட்டையின் கீழ்ப்பகுதியிலிருந்த நகரத்தில் செங்கற்களாலான வீடுகள் இருந்தன. இவற்றில் சாதாரணமக்கள் குடியிருந்தனர். பெரும்பாலான கட்டிடங்கள் அனைத்தும் செங்கற்களாலானவை. கற்பாறைகளாலான கட்டிடங்கள் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பூமிக்கடியில் அமைக்கப்பட்டிருந்த கழிவுநீர்க் குழாய்கள் ஹரப்பா பண்பாட்டின் மற்றொரு சிறப்புக் கூறாகும். வீடுகளிளிருந்து வெளிவரும் கழிவுநீர்க் குழாய்கள் அனைத்தும் தெருக்களின் கழிவுநீர்ப்பாதையுடன் இணைக்கப்பட்டிருந்தன. இக்குழாய்கள் பெரும்பாறைக் கற்களாலோ அல்லது செங்கற்களாலோ மூடப்பட்டிருந்தன.
மொகஞ்சாதாரோ குளியல் குளம் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஹரப்பா நாகரிகம் (The Harappan Civilization), ஹரப்பா, வரலாறு, இந்திய, குளியல், குளத்தின், நாகரிகம், குழாய்கள், தானியக், மொகஞ்சாதாரோவின், அகலமும், நீளமும், கழிவுநீர்க், கோட்டைகள், பண்பாட்டின், இந்தியா, ஒவ்வொன்றும், மொகஞ்சாதாரோ, கட்டிடங்கள், பெரிய, அனைத்தும்