முகலாயப் பேரரசு
பாபர் (1526 - 1530)
இந்தியாவில் முகலாயப்பேரரசை நிறுவியவர் பாபர். அவரது இயற்பெயர் சாகிருதீன் முகமது. தனது தந்தை வழியில் தைமூருக்கும், தாய் வழியில் செங்கிஸ்கானுக்கும் உறவினர். பாபர் தனது தந்தை உமர் ஷேக் மீர்சாவின் பர்கானாவிற்கு வாரிசாகப் பொறுப்பேற்றார். ஆனால் அவரது தூரத்து உறவினர் ஒருவரால் அது தட்டிப்பறிக்கப்படவே பாபர் தனது ஆட்சிப் பகுதியை இழந்தார். சிறிது காலம் நாடோடியாகத் திரிந்த அவர், தனது மாமன்கள் ஒருவரிடமிருந்து காபூலைக் கைப்பற்றினார், பின்னர், இந்தியாவைக் கைப்பற்றும் ஆசையை வளர்த்துக் கொண்ட
பாபர் |
போர் வெற்றிகள்
பாபர் படையெடுத்தபோது இந்தியாவில் ஐந்து முக்கிய முஸ்லிம் அரசுகளும் டெல்லி, குஜராத், மாளவம், வங்காளம், தக்காணம், இரண்டு முக்கிய இந்து அரசுகளும் - மேவாரின் ராண சங்கா மற்றும் விஜய நகரப் பேரரசு இருந்தன. 1525ஆம் ஆண்டு, காபூலிலிருந்து பாபர் மீண்டும் இந்தியா மீதான படையெடுப்பைத் தொடர்ந்தார். லாகூரின் ஆளுநராக இருந்த தௌலத்கான் லோடியை எளிதில் முறியடித்து அப்பகுதியைக் கைப்பற்றினார். பின்னர் டெல்லி நோக்கி முன்னேறினார். 1526 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் நாள் நடைபெற்ற முதலாம் பானிப்பட்டுப் போரில் பாபர் இப்ராஹிம் லோடியை முறியடித்தார். போரில் லோடி கொல்லப்பட்டார். பாபரிடமிருந்த குதிரைப் படையும் பீரங்கிப்படையுமே அவரது வெற்றிக்கு வழிவகுத்தன. டெல்லியைக் கைப்பற்றிய பாபர் தனது மகன்
முதலாம் பானிப்பட்டுப் போர் |
ராணா சங்கா மற்றும் ஆப்கானியர்கள் மீது அவர் கொண்ட வெற்றிகள் அவரை இந்தியாவின் உண்மையான ஆட்சியாளராக்கின. மேவாரின் ராணா சங்கா ஒரு சிறந்த ராஜபுத்திர வீரர். அவர் பாபருக்கு எதிராகப் போர் தொடுத்தார். 1527ஆம் ஆண்டு ஆக்ராவிற்கு அருகில் நடைபெற்ற கானுவாப் போரில் பாபர் அவரை முறியடித்தார். இந்த வெற்றிக்குப் பிறகு பாபர் காஸி என்ற பட்டத்தை சூட்டிக் கொண்டார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
முகலாயப் பேரரசு , பாபர், வரலாறு, தனது, பேரரசு, இந்திய, போரில், போர், அவர், ஆண்டு, முகலாயப், அவரது, சங்கா, இந்தியா, நடைபெற்ற, லோடியை, கொண்டார், ராணா, அவரை, மேவாரின், முறியடித்தார், பானிப்பட்டுப், முதலாம், கொண்ட, வழியில், தந்தை, இந்தியாவில், இந்தியாவின், உறவினர், கைப்பற்றினார், அரசுகளும், முக்கிய, வெற்றிகள், பின்னர், டெல்லி