மராட்டியர்கள்
தனது பத்தொன்பதாம் வயதிலேயே தந்தைக்குப்பிறகு பாலாஜி பாஜிராவ் பேஷ்வா பதவியிலமர்ந்தார்.
1749ல் மராட்டிய அரசர் ஷாகு வாரிசு ஏதுமின்றி இறந்தார். வாரிசாக நியமிக்கப்பட்ட ராம்ராஜ் என்பவரை பாலாஜி பாஜிராவ் சதாராவில் சிறைவைத்தார். மராட்டிய அரசு முழுவதும் பேஷ்வாவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
1752ல் பேஷ்வா முகலாயப் பேரரசுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன்படி உள்நாட்டு அயல்நாட்டு எதிரிகளிடமிருந்து முகலாயப் பேரரசரை பாதுகாப்பதாக பேஷ்வா உறுதியளித்தார். அதற்குப்பதிலாக, வடமேற்கு மாகாணங்களில் சௌத், சர்தேஷ்முகி வரிகளையும், ஆக்ரா மற்றும் ஆஜ்மீர் பகுதிகளில் மொத்த வருவாயையும் பேஷ்வா வசூலித்துக் கொள்ள பேரரசர் அனுமதித்தார்.
பேஷ்வா பாலாஜி பாஜிராவ் |
முகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு மராட்டியர்கள் இந்தியாவில் ஒரு பெரும் சக்தியாக எழுச்சி பெற்றனர். ஆனால், அவர்களால் பிரிட்டிஷ் ஆதிக்கம் நிலைநாட்டப்பட்டதை தடுக்கமுடியவில்லை.
மராட்டியத்தலைவர்களான ஹோல்கர், சிந்தியா, போன்ஸ்லே போன்றவர்களுச்கிடையே நிலவிய ஒற்றுமையின்மையே அவர்களது வீழ்ச்சிக்கான காரணங்களின் முதன்மையானதாகும். மேலும், அவர்களது படையும், போரிடும் முறைகளும் மேம்பட்டு இருந்ததால், இறுதியில் பிரிட்டிஷாரே வெற்றி பெற்றனர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மராட்டியர்கள் , பேஷ்வா, வரலாறு, பாலாஜி, மராட்டியர்கள், பாஜிராவ், மராட்டிய, இந்திய, முகலாயப், பெற்றனர், அவர்களது, மேலும், அகமது, இறந்தார், இந்தியா, மராட்டியருக்கு