மராட்டியர்கள்
சிவாஜி ஒரு ஆக்க பூர்வமான மேதை. மராட்டியருக்கான ஒரு நாட்டை உருவாக்கியவர். ஜாகீர்தாராக இருந்து சத்திரபதியாக அவர் ஏற்றம் பெற்றது பிரமிக்கத்தக்கது. மராட்டியரை ஒன்றிணைத்து முகலாயப் பேரரசுக்கு ஒரு பெரும் எதிரியாக அவர் விளங்கினார். அவர் ஒரு துணிச்சலான வீரர், ஆற்றல்மிகு ஆட்சியாளர்.
சிவாஜியின் வழித் தோன்றல்கள்
சிவாஜியின் மறைவுக்குப்பின், அவரது புதல்வர்களான ஷாம்பாஜிக்கும் ராஜாராமுக்கும் இடையே வாரிசுரிமைப்போர் நடைபெற்றது. ஷாம்பாஜி அதில் வெற்றிபெற்றார். ஆனால், பின்னர் அவர் முகலாயர்களால் சிறைப்படுத்தப்பட்டு தூக்கிலிடப்பட்டார். அடுத்து ராஜராம் ஆட்சிக்கு வந்தார். முகலாயரின் விரட்டுதலுக்கு அஞ்சிய அவர் செஞ்சியில் தஞ்சம் புகுந்தார். சதாராவில் அவர் மறைந்தார். அவரது மனைவி தாராபாயை அரசப்பிரதிநிதியாகக் கொண்டு மகன் இரண்டாம் சிவாஜி ஆட்சிக்கு வந்தார். அடுத்து ஆட்சிக்கு வந்தவர் ஷாகு. அவரது ஆட்சிக் காலத்தில் பேஷ்வாக்கள் அதிகாரத்தைக் கைப்பற்றினர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மராட்டியர்கள் , அவர், வரலாறு, இந்திய, ஆட்சிக்கு, அவரது, சிவாஜி, மராட்டியர்கள், வந்தார், அடுத்து, ஆட்சிக், இந்தியா, சிவாஜியின்