மராட்டியர்கள்
![]() |
சிவாஜி-ஆரம்ப வாழ்க்கை |
இம்முறை அவுரங்கசீப் சிவாஜிக்கு எதிராக ஆம்பர் நாட்டு ராஜா ஜெய்சிங்கை அனுப்பிவைத்தார். ஜெய்சிங் படைகளை நன்கு தயார் செய்து கொண்டு சிவாஜியின் குடும்பமும், கருவூலமும் இருந்த புரந்தர் கோட்டையை முற்றுகையிட்டார். வேறு வழியில்லாத நிலையில், சிவாஜி ஜெய்சிங்குடன் பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டார். 1665 ஆம் ஆண்டு இருவருக்கும் இடையே புரந்தர் உடன்படிக்கை கையெழுத்தாகியது. அவ்வுடன் படிக்கைப்படி, சிவாஜி தம்மிடமிருந்த 35 கோட்டைகளில் 23 கோட்டைகளை முகலாயரிடம் ஒப்படைத்தார். முகலாயப் பேரரசுக்கு விசுவாசமாக இருக்கவும், சேவையாற்றவும் வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் எஞ்சியிருந்த 12 கோட்டைகள் சிவாஜியிடமே விடப்பட்டன. பீஜப்பூர் அரசுக்குச் சொந்தமான ஒரு சில பகுதிகளை வைத்திருக்கும் உரிமை சிவாஜிக்கு அளிக்கப்பட்டது. முகலாயருக்கு தாமே நேரடியாக சேவை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை விலக்குமாறு சிவாஜி கேட்டுக் கொண்டதால், அவரது சிறுவயது மகனான ஷாம்பாஜிக்கு மன்சப் 5000 என்ற தகுதிநிலை வழங்கப்பட்டது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மராட்டியர்கள் , சிவாஜி, வரலாறு, இந்திய, மராட்டியர்கள், அவரது, முகலாயப், சிவாஜியின், சிவாஜிக்கு, புரந்தர், வேண்டும், அவுரங்கசீப், அனுப்பிவைத்தார், இந்தியா, இருந்த, அவரை, ஷெயிஷ்டகானின்