மௌரியருக்குப் பிந்தைய கால இந்தியா
மௌரியர்களின் விழ்ச்சிக்குப் பிறகு தக்காணத்தில் சாதவாகனர்கள் சுதந்திர அரசை நிறுவினார்கள். சுமார் 450 ஆண்டுகள் அவர்களது ஆட்சி நீடித்தது. ஆந்திரர்கள் என்றும் அவர்கள் அழைக்கப் பட்டனர். புராணங்களும் கல்வெட்டுக்களும் சாதவாகனர் வரலாற்றுக்கு முக்கிய சான்றுகளாக விளங்குகின்றன. கௌதமி புத்ர சதகர்ணி என்பவரின் ஆட்சி பற்றி நாசிக் மற்றும் நானாகாத் கல்வெட்டுக்கள் தெளிவாகக் குறிப்பிடுகின்றன. சாதவாகனர்களால் வெளியிடப்பட்ட நாணயங்கள் அக்காலத்திய பொருளாதார நிலைமையை எடுத்துக் கூறுகின்றன.
சாதவாகனர்கள் நாணயங்கள் |
சாதவாகன மரபின் மிகச்சிறந்த அரசராக விளங்கியவர் கௌதமிபுத்ர சதகர்ணி. கி.பி. 106 முதல் 130 ஆம் ஆண்டு வரை இருபத்தி நான்கு ஆண்டுகள் அவர் ஆட்சி புரிந்தார். அவரது அன்னை கௌதமி பாலஸ்ரீ வெளியிட்ட நாசிக் கல்வெட்டில் அவரது சாதனைகள் குறிக்கப்பட்டுள்ளன. கௌதமிபுத்ர சதகர்ணி தக்காணம் முழுவதையும் கைப்பற்றி பேரரசை விரிவுபடுத்தினார். மாளவத்தின் அரசர் நாக பாணரை எதிர்த்துப் போரிட்டு அவர் பெற்ற வெற்றி மகத்தானதாகும். அவர் பிராமண சமயத்தை ஆதரித்தார். இருப்பினும் புத்த சமயத்தவருக்கும் கொடைகளை வழங்கினார்.
கௌதமிபுத்ர சதகர்ணிக்குப் பிறகு அவரது மகன் வசிஷ்டபுத்ர புலமாயி ஆட்சிக்கு வந்தார். அவர் சாதவாகன ஆட்சியை கிருஷ்ணா நதி முகத்துவாரம் வரை விரிவு படுத்தினார். அவர் வெளியிட்ட நாணயங்களில் கப்பல் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இதனால் அவரது கடற்படை வலிமையும் கடல் வாணிக வளமையும் வெளிப்படுகிறது. சாதவாகனர்களின் கடைசி முக்கிய அரசர் யக்ஞஸ்ரீ சதகர்ணி.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மௌரியருக்குப் பிந்தைய கால இந்தியா , அவர், வரலாறு, இந்தியா, அவரது, சாதவாகன, சதகர்ணி, இந்திய, மௌரியருக்குப், கௌதமிபுத்ர, நாசிக், சாதவாகனர்கள், பிந்தைய, ஆண்டுகள், ஆட்சி, அரசன், ஹாலா, அரசர், வெளியிட்ட, விரிவுபடுத்தினார், பிறகு, நாணயங்கள், முக்கிய, ஆட்சிக்கு, வந்தார், கௌதமி, பேரரசை