மௌரியப் பேரரசு
அசோகர் காலத்திற்கு முற்பட்ட நினைவுச் சின்னங்கள் அனனத்தும் மரங்களால் ஆனதால் பெரும்பாலும் அவை அழிந்துவிட்டன. அசோகர் காலத்தில்தான் பாறைக்கற்கள் பயன்படுத்தப்பட்டன. அவற்றிலும்கூட ஒரு சில மட்டும் எஞ்சியுள்ளன. அவரது அரண்மனை, மடாலயங்கள் மற்றும் ஸ்தூபிகள் பல மறைந்துவிட்டன. சாஞ்சி ஸ்தூபி மட்டுமே எஞ்சியுள்ளது. மௌரியர் காலத்திய எஞ்சியுள்ள கலைச்சின்னங்களை பின்வரும் தலைப்புகளில் காணலாம்.
தூண்கள்
![]() |
சாரநாத் தூண் |
ஸ்தூபிகள்
![]() |
சாஞ்சி ஸ்தூபி |
குகைகள்
![]() |
நான்கு சிங்கங்கள் |
மௌரியர் வீழ்ச்சிக்கான காரணங்கள்
மௌரியர் வீழ்ச்சிக்கான காரணங்கள் பற்றி அறிஞர்களிடையே விரிவான விவாதம் நடைபெற்ற வண்ணம் உள்ளது. அசோகரது கொள்கைகளும் அவருக்கும்பின் வந்த வலிமையற்ற பின்தோன்றல்களும் மௌரியர் வீழ்ச்சிக்குக் காரணங்கள் என்ற கருத்து பழமையான கருத்தாகும். மற்றொரு கருத்து பரந்த பேரரசுக்கு ஈடுகொடுக்கும் வகையில் அரசியல், பொருளாதார நிறுவனங்கள் வளர்ச்சியடையவில்லை என்பதாகும்.
அசோகரது புத்தசமய ஆதரவுக் கொள்கைகளினால் வெறுப்புற்ற பிராமணர்கள் புஷ்யமித்திர சுங்கன் தலைமையில் ஒரு புரட்சியை நடத்தினார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் அசோகர் ஒருபோதும் பிராமணர்களுக்கு எதிராக செயல்பட்டதில்லை. அசோகரது அகிம்சைக் கொள்கை படைவீரர்களின் போரிடும் உணர்வை பாதித்தது என்பது அசோகர்மீது சுமத்தப்படும் மற்றொரு குற்றச்சாட்டாகும். ஆனால், அசோகர் அமைதிக் கொள்கையைப் பின்பற்றினாரே தவிர பேரரசின் மீதுள்ள தமது கட்டுப்பாட்டை எப்போதும் தளர்த்தியதில்லை. எனவே, மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்கு அசோகரை குற்றம் சுமத்துவது பொருத்தமற்றதாகும். அசோகரை ஒரு கொள்கைவாதி என்பதைவிட நடைமுறைவாதி என்றே கூறலாம்.
திறமையற்ற பின்தோன்றல்கள், பேரரசு இரண்டாகப் பிரிக்கப்பட்டது, அசோகரது காலத்துக்குப் பின்னர் நேர்ந்த ஆட்சித்துறை முறைகேடுகள் போன்ற பல்வேறு காரணங்களாலேயே மௌரியப் பேரரசு சிதைந்தது. இவையனைத்தும் ஓன்று சேர்ந்துதான் மௌரியப் பேரரசின் சீர்குலைவை விரைவுபடுத்தின. இறுதியில் மௌரியரை விரட்டிவிட்டு புஷ்யமித்ர சுங்கன் சுங்கவம்ச ஆட்சியை நிறுவினான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மௌரியப் பேரரசு , அசோகர், மௌரியர், அசோகரது, மௌரியப், பேரரசு, வரலாறு, இந்திய, சாஞ்சி, காரணங்கள், பேரரசின், குகைகள், சாரநாத், ஸ்தூபிகள், ஸ்தூபி, கருத்து, எஞ்சியுள்ளன, மற்றொரு, சுங்கன், அசோகரை, இந்தியா, வீழ்ச்சிக்கான, அவரது, கலைக்கு, தூண்கள், உருவங்கள், நான்கு, மட்டுமே, மிகவும், வகையில்