பதினாறு மகாஜனபதங்கள்
நந்தவம்ச ஆட்சியில் மகதத்தின் புகழ் அதன் உச்சிக்கு சென்றது. அவர்கள் பெற்ற வெற்றிகள் கங்கைச் சமவெளிக்கு அப்பாலும் சென்றது. வடஇந்தியா முழுவதையும் உள்ளடக்கிய ஒரு பெரும் பேரரசை நந்தர்கள் உருவாக்கினர்.
நந்தவம்சத்தின் வலிமைமிக்க ஆட்சியாளர் மகாபத்மநந்தர். வடஇந்தியாவிலிருந்த ஷத்திரிய வம்சத்தவர்களை முறியடித்த அவர் ஏகரதன் என்ற பட்டத்தை சூட்டிக் கொண்டார்.- மகாபத்ம நந்தரின் விரிவான படையெடுப்புகள்பற்றி புராணங்கள் குறிப்பிடுகின்றன. நந்தர்கள் கலிங்க நாட்டை கைப்பற்றியதாக காரவேலனின் ஹதிகும்பா கல்வெட்டு குறிப்பிடுகிறது. தக்காணத்தின் பெரும்பகுதி நந்தர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது என பல வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர். எனவே மகாபத்ம நந்தர் ஒரு பரந்த பேரரசை உருவாக்கினார் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
![]() |
நந்தர்கள் அரசு |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதினாறு மகாஜனபதங்கள் , வரலாறு, நந்தர்கள், நந்தர்களின், இந்திய, பதினாறு, பேரரசை, மகாஜனபதங்கள், அவர், மகாபத்ம, செல்வச், மக்கள், நந்தர், ஆட்சி, நந்தவம்சத்தின், இந்தியா, சென்றது, வலிமைமிக்க