சமன சமயம் (Jainism)
தமது கருத்துக்களை பரப்புவதற்கு மகாவீரர் சங்கத்தை அமைத்தார். அதில் ஆண் பெண் இருபாலரையும் சேருவதற்கு அனுமதித்தார். சங்கத்தில் துறவிகள் மற்றும் சாதாரண சீடர்களும் இருந்தனர். சங்க உறுப்பினர்களின் அயராத உழைப்பினால் சமண சமயம் வேகமாகப் பரவியது. குறிப்பாக மேற்கு இந்தியாவிலும், கர்நாடகத்திலும் அது பரவியது. சந்திரகுப்த மௌரியர், கலிங்க நாட்டு காரவேலர், தென்னிந்திய அரச குலங்களான கங்கர்கள், கடம்பர்கள், சாளுக்கியர்கள் மற்றும் ராஷ்டிரகூடர்கள் ஆகியோர் சமண சமயத்தை போற்றி ஆதரித்தனர்.
கி.மு. நான்காம் நூற்றாண்டின் இறுதியில் கங்கைச் சமவெளியில் கடும்பஞ்சம் ஏற்பட்டது. பத்ரபாகு மற்றும் சந்திரகுப்த மௌரியர் தலைமையில் பல சமணத் துறவிகள் கர்நாடகாவிலுள்ள சிரவணபெல்கோலாவை வந்தடைந்தனர். வட இந்தியாவிலேயே தங்கிவிட்ட சமணத் துறவிகளுக்கு ஸ்தூலபாகு என்ற துறவி தலைமையேற்றார். துறவிகளுக்கான விதிமுறைகளை அவர் மாற்றியமைத்தார். இதனால் சமண சமயம் இரண்டாக பிரிந்தது. ஒரு பிரிவினர் ஸ்வேதாம்பரர்கள் (வெள்ளையுடை அணிந்தவர்கள்) என்றும் மற்றொரு பிரிவினர் திகம்பரர்கள் (திசையையே ஆடையாகக் கொண்டவர்கள்) என்றும் அழைக்கப்பட்டனர்.
கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திகம்பரர்களின் தலைவரான ஸ்தூலபாகு பாடலிபுத்திரத்தில் முதலாவது சமண மாநாட்டைக் கூட்டினார். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் வாலாபியில் இரண்டாவது சமண மாநாடு நடைபெற்றது. பன்னிரண்டு அங்கங்கள் எனப்படும் சமண இலக்கியத்தின் இறுதி வடிவம் இம்மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சமன சமயம் (Jainism), சமயம், வரலாறு, இந்திய, சமணத், என்றும், பிரிவினர், நூற்றாண்டின், ஸ்தூலபாகு, பரவியது, jainism, இந்தியா, துறவிகள், சந்திரகுப்த, மௌரியர்