புத்த சமயம் (Buddhism)
ஆன்மா என்ற எதுவும் இல்லை. இருப்பினும் அவர் அஹிம்சையை வலியுறுத்தினார். மனித குலத்திடமும் பிற உயிரினங்களிடமும் அன்பு பாராட்டியதோடு மிகவும் நேசிக்கவும் செய்தார். எத்தகைய சினத்திற்கு அவர் தூண்டப்பட்டாலும் அமைதியாகவே பதிலளிப்பார். மாறாக, தனது அன்பாலும், கருணையாலும் அவர்களை தமது பக்கம் ஈர்த்துக் கொள்ளும் திறன் படைத்தவராக புத்தர் விளங்கினார். ஒழுக்கத்தை அடிப்படையாகக் கொண்டது அவரது சமயம். எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றிலும் அவர் தூய்மையை வலியுறுத்தினார். பகுத்தறிவாளரான புத்தர் கண்மூடித்தனமாக வாதிடாமல், எதனையும் அறிவின் அடிப்படையிலேயே அணுகினார். ஜாதிமுறையை அவர் நேரடியாக சாடாவிட்டாலும் சமூக வேற்றுமைகளுக்கு எதிராக வாதிட்டார். அனைத்து சமூகத்தவரையும் தமது சமயத்தில் சேர அனுமதித்தார். எனவே, புத்த சமய எழுச்சியை ஒரு சமயப்புரட்சி என்பதைவிட சமூகப்புரட்சி என்று கூறலாம். நடைமுறைக்கு சாத்தியமான ஒழுக்க நெறிகளை அது போதித்தது. சமூக சமத்துவ கோட்பாட்டிற்கும் அது வித்திட்டது.
புத்த சமயம் பரவுதல்
புத்தருக்கு இரண்டு வகை சீடர்கள் உண்டு - பிக்குகள் என்ற புத்த சமயத் துறவிகள், உபாசிகர்கள் என்ற சாதாரண புத்த சமயத்தைத் தழுவிய மக்கள். புத்தரது போதனைகளை பரப்புவதற்கு, புத்த சமயத் துறவிகளைக் கொண்ட சங்கம் அமைக்கப்பட்டது. ஆண், பெண், சாதி வேறுபாடுகளின்றி அனைவரும் சங்கத்தில் உறுப்பினராக சேர்க்கப்பட்டனர். பெண்துறவிகளுக்கு அவர்களது இருப்பிடம் மற்றும் பிரயாணம் குறித்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. சரிபுட்டர், மொக்கலண்ணர், ஆனந்தர் ஆகியோர் புகழ்மிக்க புத்த சமயத் துறவிகளாவர். ஜனநாயக முறைப்படி சங்கம் நிர்வகிக்கப்பட்டது. உறுப்பினர்களிடையே ஓழுக்கத்தை செயல்படுத்தும் அதிகாரம் சங்கத்திடம் இருந்தது. சங்கம் மேற்கொண்ட அயராத முயற்சிகளின் பலனாக புத்தரது வாழ்நாளிலேயே புத்தசமய கருத்துக்கள் வட இந்தியாவில் வேகமாகப் பரவியது. மகதம், கோசலம், கோசாம்மி மற்றும் பல வடஇந்திய குடியரசுகள் புத்தசமயத்தை ஏற்றுக்கொண்டன. புத்தர் மறைந்து ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகு மௌரியப் பேரரசர் அசோகர் புத்தசமயத்தை தழுவினார். அசோகர் அனுப்பிய தூதுக் குழுக்கள் மூலமாக, மேற்கு ஆசியா, இலங்கை ஆகிய பகுதிகளுக்கும் புத்த சமயம் பரவியது. சிறிய சமயப் பிரிவாகத் தோன்றிய புத்த சமயம் இவ்வாறு உலக சமயமாக மாறியது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
புத்த சமயம் (Buddhism), புத்த, சமயம், வரலாறு, அவர், புத்தர், இந்திய, சங்கம், சமயத், புத்தரது, புத்தசமயத்தை, அசோகர், பரவியது, வலியுறுத்தினார், இந்தியா, buddhism, இல்லை, தமது, ஆகிய, சமூக