இந்திய தேசிய இயக்கத்தில் தமிழ்நாட்டின் பங்கு
1905 ஆம் ஆண்டு வங்கப்பிரிவினை தமிழ்நாட்டில் சுதேசி இயக்கம் தோன்றுவதற்கு காரணமாக அமைந்தது. தமிழ்நாட்டில் சுதேசி இயக்கத்தை முன்னின்று நடத்திபவர்களில் வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்ரமணிய சிவா, சுப்ரமணிய பாரதி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். 1907 மே திங்களில் பாரதியார் காங்கிரஸ் இயக்கத்தின் தீவிரவாத தலைவர்களில் ஒருவரான பிபின் சந்திரபால் என்பவரை சென்னை நகருக்கு வரவழைத்து உரை நிகழ்த்தச் செய்தார்.
![]() |
சுப்ரமணியபாரதி |
![]() |
சுப்ரமணிய சிவா |
![]() |
வ.உ.சிதம்பரம்பிள்ளை |
தேசியத் தலைவர்கள் சிறைக்குள் அடைக்கப்பட்டது, சிறைக்குள் சித்ரவதைகளுக்குட் படுத்தப்பட்டது, சுதேசி கப்பல் கழகத்தின் சிதைவு போன்ற காரணங்களால் சினந்தெழுந்த சிலர் பாரதமாதா சங்கம் என்ற புரட்சி அமைப்பை ஏற்படுத்தினர். இதில், நீலகண்ட பிரம்மச்சாரியின் பங்கு மகத்தானதாகும். இச்சங்கத்தைச் சேர்ந்த வாஞ்சிநாதன் 1911 ஜூன் மாதத்தில் ராபர்ட் வில்லியம் டி. ஆஷ் என்ற வன்செயலுக்கு பெயர்பெற்ற பிரிட்டிஷ் அதிகாரியை மணியாச்சி ரயில் நிலையத்தில் சுட்டுக் கொன்றார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்திய தேசிய இயக்கத்தில் தமிழ்நாட்டின் பங்கு , இந்திய, சுதேசி, வரலாறு, தேசிய, இயக்கத்தில், சுப்ரமணிய, நீராவிக்கப்பல், அவர், பங்கு, சிவா, பிரிட்டிஷ், சிறைக்குள், தமிழ்நாட்டின், தமிழ்நாட்டில், இந்தியா, ஆண்டு, தூத்துக்குடியில், கழகத்தை, அழைக்கப்பட்டார், கடுமையான, பிள்ளை, முன்னின்று, இயக்கம், சிதம்பரம், திங்களில், செய்தார், சென்னை, சுப்ரமணியபாரதி