இந்திய தேசிய இயக்கம் (1917 - 1947)
காந்தியின் வருகை
தேசிய இயக்கத்தின் மூன்றாம் நிலை (1917 - 47) காந்தி காலம் எனப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய இயக்கத்தின் தன்னிகரற்றத் தலைவராக விளங்கினார். அவரது கொள்கைகளான அகிம்சை மற்றும் சத்தியாக்கிரகம் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிராக செயல்படுத்தப்பட்டன. தேசிய இயக்கத்தை காந்தி மக்கள் இயக்கமாக மாற்றினார்.
மோகன்தாஸ் கரம் சந்த் காந்தி 1869 அக்டோபர் 2 ஆம் நாள் குஜராத்தில் போர்பந்தர் என்ற ஊரில் பிறந்தார். இங்கிலாந்து சென்று சட்டம் பயின்றார். 1891ல் இந்தியா திரும்பினார். 1893ல் தென் ஆப்ரிக்கா சென்ற அவர் அங்கு நிலவிய இன ஒதுக்கல் கொள்கைக்கு எதிரான போராட்டத்தில் 20 ஆண்டுகள் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். இறுதியாக 1915ல் இந்தியா திரும்பினார். பின்னர் இந்திய தேசிய இயக்கத்தில் முழுமையாக பங்கேற்று வழி நடத்திச் சென்றார்.
![]() |
மகாத்மா காந்தி |
சம்ப்ரான், கேடா, அகமதாபாத் போன்ற சிறிய அளவிலான போராட்டங்கள்தாம் மகாத்மா காந்தியை மக்களிடம் நெருக்கமாக கொண்டு சென்றன. அவர்களது பிரச்சினைகளை காந்தியும் புரிந்து கொள்ள முடிந்தது. இவ்வாறு, காந்தி மக்களின் தலைவர் என்ற நிலைக்கு உயர்ந்தார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்திய தேசிய இயக்கம் (1917 - 1947) , இந்திய, காந்தி, தேசிய, வரலாறு, இயக்கம், இந்தியா, மகாத்மா, சம்ப்ரான், தொழிலாளர்களின், கோரிக்கையை, இறுதியாக, போராட்டத்தில், சத்தியாக்கிரகம், திரும்பினார், அவர், இயக்கத்தின்