');
if (iCwidth > 336) {
document.write('');
}else if(iCwidth <=336 && iCwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->
நேருவின் மறைவுக்குப் பிறகு இந்தியாவின் பிரதமராக லால் பகதூர் சாஸ்திரி பதவிக்கு வந்தார். பொது வாழ்வில் நேர்மைக்கு இலக்கணமாக அவர் திகழ்ந்தார். 1965 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தானியப் போரை, 1966 ஜனவரியில் செய்து கொண்ட தாஷ்கண்ட் ஒப்பந்தப்படி முடிவுக்கு கொண்டுவந்தார். அவரது அகால மரணம் நாட்டிற்கு பேரிழப்பாகும்.
|
இந்திரா காந்தி |
1966 ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற நேருவின் மகளான இந்திரா காந்தி அப்போது நாட்டின் பெரும் சவால்களாக விளங்கிய உணவுப் பற்றாக்குறை, 1971 ஆம் ஆண்டு பங்களாதேஷ் சிக்கல் போன்றவற்றை திறமையுடன் எதிர்கொண்டார். 1975ல் அவரது ஆட்சிக்கு எதிர்ப்புகள் வலுக்கவே நாட்டில் அவசர நிலை ஆட்சியைக் கொண்டு வந்தார். இது இந்தியாவின் ஜனநாயக மரபுக்கு ஒரு கரும்புள்ளியாக அமைந்தது. இருப்பினும், 1977ல் பொதுத் தேர்தலை அறிவித்ததன் மூலம் மீண்டும் ஜனநாயகம் மலர அவர் வித்திட்டார். இத்தேர்தலில் அவர் தோல்வியடைந்தார்.
|
மொராஜி தேசாய் |
பின்னர் 1980ல் ஜனநாயக வழியில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினார். இவரது ஆட்சியில் 1983ஆம் ஆண்டு பஞ்சாப், அமிர்தசரஸ் பொற்கோவிலுக்குள் நீல நட்சத்திர நடவடிக்கையை இந்திய ராணுவத்தைக் கொண்டு எடுத்தார். இச் செயல் காரணமாக துரதிஷ்டவசமாக அவரது பாதுகாவலர்களாலேயே இந்திராகாந்தி 1984ல் சுட்டுக் கொல்லப்பட்டார்.
|
ராஜிவ் காந்தி |
1977 முதல் 1980 வரை நடைபெற்ற ஜனதா கட்சியின் ஆட்சியின்போது இந்தியாவின் பிரதமராக மொராஜி தேசாய் பதவி வகித்தார். விடுதலைக்குப் பிறகு பதவியேற்ற முதலாவது காங்கிரஸ் அல்லாத அரசு இதுவேயாகும். ஜனதா கட்சி தலைவர்களுக்கிடையே நிலவிய ஒற்றுமையின்மையின் காரணமாக ஜனதா கட்சி அரசு கவிழ்ந்தது.
1984ல் இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பிறகு அவரது புதல்வர் ராஜிவ் காந்தி பிரதமரானார். அந்நிய முதலீட்டை அவர் ஊக்குவித்தார். புதிய கல்விக் கொள்கையையும் அறிமுகப்படுத்தினார். இலங்கையில் நடைபெற்ற இன அடிப்படையிலான வன்முறைக்கு முடிவு கட்டும் நோக்கத்துடன் இந்திய அமைதிப் படையை அங்கு அனுப்பி வைத்தார். 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற அடுத்த தேர்தல் வரை அவர் பிரதமராக இருந்தார். பின்னர், 1991 மே திங்களில் இலங்கை தமிழ் தீவிரவாதிகளால் மனித வெடிகுண்டு மூலம் திரு பெரும்புதூரில் கொல்லப்பட்டார்.
');
if (iCwidth > 336) {
document.write('');
}else if(iCwidth <=336 && iCwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->