ஹர்ஷ வர்த்தனர்
அக்காலத்தில் சமூக நிலைமை பற்றி பாணர், யுவான்சுவாங் இருவருமே விரிவாகக் குறிப்பிட்டுள்ளனர். பிராமணர், ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற நான்கு சாதிப்பிரிவுகள் வழக்கிலிருந்தன. சமூகத்தில் சலுகைபெற்று விளங்கியவர்கள் பிராமணர்கள். அவர்களுக்கு அரசரால் நிலங்கள் மான்யங்களாக வழங்கப்பட்டன. ஷத்திரியர்கள் ஆளும்வர்க்கத்தினர். வைசியர்கள் பெரும்பாலும் வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர். சூத்திரர்கள் வேளாண்மைத் தொழிலை மேற்கொண்டதாக யுவான்சுவாங் குறிப்பிட்டுள்ளார். பல்வேறு கிளை சாதிகளும் இருந்தன. மகளிர் நிலை திருப்திகரமாக இல்லை. தங்களது கணவரைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பளிக்கும் சுயம்வரமுறை மறைந்து விட்டிருந்தது. வரதட்சணைமுறை பரவலாக பின்பற்றப்பட்டது. 'சதி' என்ற உடன்கட்டையேறும் வழக்கமும் காணப்பட்டது. மூன்றுவகை சவ அடக்கம் பற்றி யுவான் சுவாங் குறிப்பிட்டுள்ளார். எரித்தல், புதைத்தல் மற்றும் காட்டில் எறிந்துவிடுதல்.
ஹர்ஷரது ஆட்சிக் காலத்தில் வாணிபம் சீர்குலைந்தது. வணிக மையங்களும், நாணயங்களும், வாணிகக் குழுக்களும் குறைந்த எண்ணிக்கையிலேயே இருந்தமை இதற்கு சான்று. கைத்தொழிலும், வேளாண் நடவடிக்கைகளும்கூட சுறுசுறுப்பிழந்து காணப்பட்டன. பொருட்களுக்கு அதிக தேவை இல்லாமற்போகவே, உற்பத்தியும் குறைவாகவே இருந்தது. இதனால் தன்னிறைவுபெற்ற கிராமியப் பொருளாதாரம் எழுச்சி பெற்றது. குப்தர் காலத்துடன் ஒப்பிடும்போது ஹர்ஷர் காலத்திய பொருளாதார நிலை வளமைகுன்றியே இருந்தது.
பண்பாட்டு வளர்ச்சி
ஹர்ஷர் காலத்திய கலை மற்றும் கட்டிடக்கலை பெரிதும் குப்தர் காலத்தை ஒட்டியே காணப்பட்டது. நாளந்தாவில் ஹர்ஷர் கட்டிய அடுக்குமாடி மடாலயம் பற்றி யுவான் சுவாங் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார். எட்டு அடி உயரமுள்ள செம்பாலான புத்தர் சிலை பற்றியும் அவர் கூறியுள்ளார். சிறந்த கட்டிட வேலைப்பாடுகள் கொண்ட சிர்பூர் லட்சுமணர் கோயில் ஹர்ஷர் காலத்தைச் சேர்ந்ததாகும்.
சிர்பூர் லட்சுமணர் கோயில் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஹர்ஷ வர்த்தனர் , வரலாறு, ஹர்ஷர், இந்திய, சுவாங், ஹர்ஷ, அவரது, நாளந்தா, குறிப்பிட்டுள்ளார், அவர், யுவான், ஹர்ஷரது, வர்த்தனர், பற்றி, லட்சுமணர், சிர்பூர், கோயில், இந்தியா, கல்வி, எழுதியுள்ளார், பார்த்திரிஹரி, சமூக, காணப்பட்டது, நிலை, பாணர், பொருளாதார, ஆட்சிக், யுவான்சுவாங், குப்தர், காலத்தில், காலத்திய