குப்த பேரரசு
குப்த மரபிலேயே மிகச் சிறந்த அரசராக விளங்கியவர் சமுத்திரகுப்தர். அவரது ஆட்சிபற்றி அலகாபாத் கல்தூண் கல்வெட்டு விவரமாகக் குறிப்பிடுகிறது. அவரது படையெடுப்பின் மூன்று நிலைகள் இக்கல்வெட்டில் கூறப்பட்டுள்ளன.
1. வட இந்திய ஆட்சியாளருக்கு எதிராக மேற்கொண்டவை.
2. தென்னிந்திய ஆட்சியாளர்களுக்கு எதிரான புகழ்மிக்க "தட்சிணபாதா" படையெடுப்பு.
3. வட இந்திய ஆட்சியாளர்களுக்கு எதிரான இரண்டாவது படையெடுப்பு.
![]() |
சமுத்திரகுப்தர் |
பின்னர், சமுத்திரகுப்தர் தென்னிந்திய அரசர்களுக்கெதிராக படை நடத்திச் சென்றார். அவரது தென்னிந்தியப் படையெடுப்பின் போது பன்னிரண்டு ஆட்சியாளர்களை முறியடித்ததாக அலகாபாத் கல்தூண் கல்வெட்டு குறிப்பிடுகிறது. அவர்களது பெயர்களும் தெளிவாகத் தரப்பட்டுள்ளன. கோசல நாட்டு மகேந்திரன், மகாகாந்தாரத்தின் வியாகராஜன், கேரளாவின் மந்தராஜன், பிஸ்தபுரத்து மகேந்திரகிரி, கோட்டுராவைச் சேர்ந்த சுவாமிதத்தன், ரெண்டபள்ளாவின் தாமனன், காஞ்சியைச் சேர்ந்த விஷ்கோபன், அவமுக்த நாட்டு நீலராஜன், வெங்கிநாட்டு ஹஸ்திவர்மன், பலாக்காவின் உக்ரசேனன், தேவராஷ்டிரத்து குபேரன் மற்றும் குஸ்தலபுரத்து தனஞ்சயன்.
![]() |
சமுத்திரகுப்தரின் நாணயங்கள் |
சமுத்திரகுப்தரின் பேரரசுப் பரப்பு
இந்த போர் வெற்றிகளுக்குப் பிறகு மேலை கங்கைச் சமவெளி, தற்கால உத்திரப் பிரதேசத்தின் பெரும்பகுதி மத்திய இந்தியாவின் ஒரு பகுதி, வங்காளத்தின் தென்மேற்குப் பகுதி ஆகிய பகுதிகளும் சமுத்திரகுப்தரின் ஆட்சிக்குட்பட்டது. இப்பகுதிகளில் அவரது நேரடி நிர்வாகம் நடைபெற்றது. தெற்கில் கப்பம் செலுத்தும் அரசுகள் இருந்தன. மேற்கிலிருந்த சாக மற்றும் குஷான சிற்றரசுகளும் அவரது ஆதிக்கத்திற்கு கட்டுப்பட்டே இருந்தன. தக்காணத்தின் கிழக்குக் கடற்கரையிலிருந்த அரசுகளும், பல்லவ அரசு உட்பட, அவரது மேலாண்மையை ஏற்றுக் கொண்டிருந்தன.

தேடல் தொடர்பான தகவல்கள்:
குப்த பேரரசு , சமுத்திரகுப்தர், வரலாறு, அவரது, இந்திய, சமுத்திரகுப்தரின், குப்த, படையெடுப்பு, அவர், அச்சுதன், தென்னிந்திய, கங்கைச், மேலை, அவர்களது, பேரரசு, சமவெளி, பின்னர், பெயர்களும், அரசர்களை, ஏற்றுக், பகுதி, இருந்தன, மேலாண்மையை, அவர்களை, கொண்டார், அழித்து, நாட்டு, தமது, அலகாபாத், கல்தூண், அரசராக, இந்தியா, இந்தியாவின், கல்வெட்டு, குறிப்பிடுகிறது, எதிரான, குடும்பத்தை, ஆட்சியாளர்களுக்கு, எதிராக, படையெடுப்பின், இணைத்துக்