இந்திய வரலாற்றில் புவியியல் தாக்கம்
காஷ்மீர் பள்ளத்தாக்கு உயர்ந்த மலைகளால் சூழப்பட்டுள்ளது. இருப்பிலும் பல்வேறு கணவாய்கள் மூலம் இப்பள்ளத்தாக்கை சென்றடையலாம். பண்பாட்டிலும் பாரம்பரியத்திலும் காஷ்மீர் பள்ளத்தாக்கு தனிச்சிறப்புடன் திகழ்கிறது. இமாலய மலைகளின் அடிவாரத்தில் நேபாளம் உள்ளது. கங்கைச் சமவெளியிலிருந்து பல்வேறு கணவாய்கள் மூலம் நேபாளத்தை சென்றடையலாம்.
கிழக்கே அஸ்ஸாம் வரை இமயமலைகள் நீண்டு கிடக்கின்றன. பாட்கோய், நாகாய், லுஷாய் போன்ற மலைத்தொடர்கள் இவற்றில் குறிப்பிடத்தக்கவை. கடும் மழைக்கும் அடர்ந்த காடுகளுக்கும் இவை பெயர் பெற்றவை. ஆனால், வாழ்வதற்கான சூழல் மிகவும் குறைவே. வடகிழக்கு இந்தியாவின் மலைகளைக் கடந்து செல்வதும் எளிதல்ல. எனவே, இப்பகுதி பெரும்பாலும் தனித்தே காணப்படுகிறது.
![]() |
இந்தோ - கங்கைச் சமவெளி் |
கங்கை, சிந்து, பிரம்மபுத்திரா ஆகிய மூன்று முக்கிய நதிகள் பாயும் பகுதியே இந்தோகங்கைச் சமவெளி என்று அழைக்கப்படுகிறது. ஆறுகளில் அடித்து வரப்படும் கரிசல் மண் மிகப்பரந்த இந்த நிலப்பரப்பில் படிவதால் வளம் மிக்க விளை நிலங்கள் இங்குள்ளன.
இமய மலைகளுக்கு அப்பால் சிந்து நதி உற்பத்தியாகிறது. ஜூலம், சீனாப், ராவி, சட்லெஜ், பியாஸ் ஆகியன இதன் முக்கிய கிளை நதிகளாகும், சிந்து நதியால் மிகவும் பயன்பெறுவது பஞ்சாப் சமவெளியாகும். பஞ்சாப் என்ற சொல்லுக்கு ஐந்து நதிகள் பாயும் பகுதி என்று பொருள். சிந்துப் பள்ளத்தாக்கின் கீழ்ப்புறத்தில் சிந்து மாகாணம் அமைந்துள்ளது. சிந்துப் பள்ளத்தாக்கு மிகவும் வளமான நிலங்களைக் கொண்டுள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்திய வரலாற்றில் புவியியல் தாக்கம், இந்திய, வரலாறு, சிந்து, கணவாய்கள், கங்கைச், மிகவும், உள்ளது, பள்ளத்தாக்கு, வரலாற்றில், புவியியல், தாக்கம், முக்கிய, உயர்ந்த, நதிகள், பாயும், சிந்துப், பஞ்சாப், சமவெளி, இந்தோ, பல்வேறு, இந்தியாவின், மூலம், சென்றடையலாம், இந்தியா, காரகோரம், காஷ்மீர்