முந்தைய இடைக்கால இந்தியா
அச்சத்தை எதிர்கொண்டிருந்த வடஇந்தியாவின் இந்து அரசர்கள் பிருதிவிராஜ் சௌகன் தலைமையில் ஒரு கூட்டிணைவை ஏற்படுத்தினர். கி.பி. 1131 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாம் தரெய்ன் போரில் பிருதிவிராஜ் சௌகன் முகமது கோரியை முறியடித்தார். இத்தோல்வியினால், முகமது கோரி தமக்கு தலைகுனிவு ஏற்பட்டதாகக் கருதினார். எனவே, தகுந்த பதிலடி கொடுக்கும் நோக்கத்துடன் ஒரு லட்சத்து இருபதாயிரம் வீரர் கொண்ட பெரும்படையைத் திரட்டினார். அப்படையுடன் முகமது கோரி பெஷாவர் முல்தான் வழியாக லாகூரையடைந்தார். தமது மேலாண்மையை ஏற்றுக் கொள்ளும்படியும் இஸ்லாமிய சமயத்திற்கு மாறிவிடும்படியும் பிருதிவிராஜனுக்கு தூது அனுப்பினார். ஆனால் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த பிருதிவிராஜ் சௌகன் மீண்டும் படையெடுப்பாளரை எதிர்கொள்ள முடிவு செய்தார். மூன்று லட்சம் குதிரைகள், மூன்றாயிரம் யானைகள் ஏராளமான காலாட்படை வீரர்களைக் கொண்ட பெரும்படையைத் திரட்டினார். பல இந்து அரசர்களும், சிற்றரசர்களும் அவருடன் இணைந்தனர். 1192 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது தரெய்ன் போரில் முகமது கோரி பிருதிவிராஜனை இறுதியாக முறியடித்து கைப்பற்றிக் கொன்றார்.
தரெயன் போர் |
இந்து அரசுகளின் தோல்விக்கான காரணங்கள்
இந்து அரசுகளின் தோல்விக்கான காரணங்களை வரலாற்று ரீதியாக ஆய்வு செய்தல் வேண்டும். அவர்களுக்கிடையே ஒற்றுமையில்லாததே தோல்விக்கு அடிப்படைக் காரணமாகும். பல அணிகளாக அவர்கள் பிரிந்து கிடந்தனர். தங்களுக்கிடையே போரிட்டுக் கொண்டிருந்த ரஜபுத்திரர்கள் வலிமையிழந்து காணப்பட்னர். இரண்டாவதாக, பல இந்து அரசுகள் வீழ்ச்சியடைந்து கொண்டிருந்தன. அவர்களது ராணுவ முறைகள் மிகவும் பழமையானவை. முஸ்லீம்களின் படைகளைவிட தரத்தில் குறைந்தவை. இந்தியர்கள் யானைகளையே பெரிதும் நம்பியிருந்தனர். ஆனால் முஸ்லிம்கள் விரைவாகச் செல்லக்கூடிய குதிரைப்படைகளைக் கொண்டிருந்தனர். முஸ்லிம் வீரர்கள் திறமையிலும் அமைப்பு ரீதியிலும் உயர்வாகவே காணப்பட்டனர். அவர்களுக்கிருந்த சமய உணர்வும் இந்தியச் செல்வத்தின்மீது கொண்டிருந்த ஆசையும் அவர்களுக்கு பெருத்த உற்சாகம் அளிப்பதாக இருந்தன. இந்துக்களிடையே ஷத்திரியர்கள் என்ற ஒரு வகுப்பினர் மட்டுமே போரிடும் கடமையைப் பெற்றிருந்தனர். மேலும், இந்துக்கள் எப்போதும் தற்காப்புக்காகவே போரிடும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். இது வலிமை குறைந்த நிலையின் வெளிப்பாடாகும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
முந்தைய இடைக்கால இந்தியா , வரலாறு, முகமது, இந்து, இந்தியா, கோரி, தரெய்ன், இந்திய, போரில், கொண்ட, முந்தைய, ஆண்டு, பிருதிவிராஜ், இடைக்கால, இந்தியாவில், போர், சௌகன், முஸ்லிம்கள், சந்தாவர், ஐபக், போரும், கொண்டிருந்தனர், போரிடும், பகுதிகளை, கொண்டிருந்த, தோல்விக்கான, அரசுகளின், பெரும்படையைத், திரட்டினார், நடைபெற்ற, இந்தியாவின், இரண்டாவது, தரெயன், அரசு, அவர்களது, மாபெரும், முஸ்லிம்