டெல்லி சுல்தானியத்தின் கீழ் இந்தியா
சுல்தான் மற்றும் அவரது குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் அரசருக்கு சொந்தமான கர்கானாக்களில் (தொழிற்சாலைகளில்) உற்பத்தி செய்யப்பட்டன. தங்கம், வெள்ளியாலான விலையுயர்ந்த பொருட்களும் தங்க ஆபரணங்களும் அங்கு உற்பத்தியாகின. சுல்தான்களைப் பின்பற்றி உயர்குடியினரும் ஆடம்பர வாழ்வில் ஈடுபட்டனர். அவர்களுக்கு அதிக ஊதியம் வழங்கப்பட்டதால் செல்வத்தை ஏராளமாக சேர்த்தனர்.
டெல்லி சுல்தானிய ஆட்சிக் காலத்தில் நாணய முறையும் நன்கு வளர்ச்சி பெற்றது. இல்துத்மிஷ் பலவகையான வெள்ளி தாங்காக்களை வெளியிட்டார். கில்ஜிகள் காலத்தில் ஒரு வெள்ளி தாங்கா என்பது 48 ஜிடால்களைக் கொண்டதாகும். துக்ளக் ஆட்சிக் காலத்தில் அது 50 ஜிடால்களாக இருந்தது. அலாவுதீன் கில்ஜியின் தென்னிந்தியப் படையெடுப்புக்குப் பிறகு தினார் எனப்படும் தங்க நாணயங்கள் புகழ்பெற்று விளங்கின. செப்பு நாணயங்கள் மிகக் குறைவாகவும், தேதிகள் இன்றியும் காணப்படுகின்றன. முகமது பின் துக்ளக் அடையாள நாணய முறையை பரிசோதித்ததோடு தங்கம், வெள்ளி நாணயங்களையும் வெளியிட்டார். அவை எட்டு வெவ்வேறு தங்கசாலைகளில் வார்க்கப்பட்டன. குறைந்தது 25 வகைப்பட்ட தங்க நாணயங்கள் அவரால் வெளியிடப்பட்டன.
சமூக வாழ்க்கை
![]() |
டெல்லி சுல்தானிய நீதிமன்றம் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
டெல்லி சுல்தானியத்தின் கீழ் இந்தியா , வரலாறு, டெல்லி, இந்தியா, இந்திய, காலத்தில், பொருட்கள், தங்க, வெள்ளி, நாணயங்கள், வழக்கமும், கீழ், சுல்தானியத்தின், வெளியிட்டார், பர்தா, பெண்களிடையே, நாணய, துக்ளக், முறையை, தங்கம், பெற்றது, வளர்ச்சி, உற்பத்தி, இந்தியாவில், குறைந்தது, சுல்தானிய, நன்கு, ஆட்சிக்