அரசியலமைப்பின் வளர்ச்சி (1858 - 1947)
5 தலைமை ஆளுநரின் நிர்வாகக் குழுவில் முதன் முறையாக இந்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டார். அவ்வாறு நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் எஸ்.பி. சின்ஹா என்பவராவார்.
6. பம்பாய் மற்றும் சென்னை மாகாணங்களில் நிர்வாகக் குழு உறுப்பினர் எண்ணிக்கை 2 லிருந்து 4 ஆக உயர்த்தப்பட்டது. இந்தியர்களை இப்பதவிகளுக்கு நியமிக்கும் வழக்கமும் தொடங்கியது.
7. இங்கிலாந்திலிருந்த இந்தியா கவுன்சிலிலும் இரண்டு இந்தியர்கள் இடம் பெற்றனர்.
இந்தியாவில் ஒரு நாடாளுமன்ற அரசாங்க முறையை ஏற்படுத்தும் நோக்கம் மின்டோ-மார்லி சீர்திருத்தங்களுக்கு கிடையாது. இருப்பினும், இது தாராளமான நடவடிக்கையே என்று கருதிய மிதவாதிகள் இந்த சீர்திருத்தங்களை வரவேற்றனர். தனித்தொகுதிகளை ஒதுக்குதல் என்ற கோட்பாடு 1947 ஆம் ஆண்டு இந்தியப் பிரிவினைக்கு இட்டுச் சென்றது.
மான்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள்
செம்ஸ்போர்டு பிரபு |
இந்த சட்டமே மான்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் என அழைக்கப்படுகிறது. அப்போது இந்தியாவின் தலைமை ஆளுநராக இருந்தவர் செம்ஸ்போர்டு பிரபு ஆவார்.
இந்த சட்டத்தின் முக்கிய கூறுகள்:
1. மாகாணங்களில் இரட்டையாட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது. மாகாண அதிகாரங்கள் யாவும் "ஒதுக்கப்பட்ட துறைகள்" எனவும் "மாற்றப்பட்ட துறைகள்" எனவும் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. ஒதுக்கப்பட்ட துறைகளின்கீழ் காவல்துறை, சிறைச்சாலைகள், நிலவருவாய், நீர்ப்பாசனம், வனங்கள் போன்ற துறைகளும் மாற்றப்பட்ட துறைகளின் கீழ், கல்வி, உள்ளாட்சி அமைப்புகள், பொது ககாதாரம், துப்புரவு, வேளாண்மை மற்றும் தொழில்கள் போன்ற துறைகளும் இருந்தன. ஒதுக்கப்பட்ட துறைகள் ஆளுநர் மற்றும் அவரது நிர்வாகக் குழுவின் நிர்வாகத்தில் இயங்கின. மாற்றப்பட்ட துறைகளை ஆளுநரும் அவரது அமைச்சர்களும் நிர்வகித்தனர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அரசியலமைப்பின் வளர்ச்சி (1858 - 1947) , வரலாறு, இந்திய, செம்ஸ்போர்டு, ஒதுக்கப்பட்ட, நிர்வாகக், அரசியலமைப்பின், மான்டேகு, துறைகள், அவரது, அறிக்கை, இந்தியா, வளர்ச்சி, தலைமை, மாற்றப்பட்ட, பிரபு, துறைகளும், முக்கிய, எனவும், மாகாணங்களில், செலவு, வரவு, இந்தியாவின், ஆளுநர், இந்தியர், ஆண்டு, இந்தியாவில், சீர்திருத்தங்கள்