அரசியலமைப்பின் வளர்ச்சி (1858 - 1947)
1858 நவம்பர் 1 ஆம் நாள் விக்டோரியா அரசியின் அறிக்கையை அலகாபாத் நகரில் கானிங் பிரபு அறிவித்தார். இந்த அரச அறிக்கை இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு பல்வேறு முக்கிய இடங்களில் பொது மக்கள் முன்னிலையில் படிக்கப்பட்டது. இந்தியாவில் வணிகக் குழுவின் ஆட்சி முடிவுக்கு வந்ததையும் அரசியார் ஆட்சிப் பொறுப்பை தாமே மேற்கொண்டதையும் இந்த அறிக்கை குறிப்பிட்டது. இந்திய அரசர்களுடன் வணிகக்குழு செய்து கொண்டிருந்த உடன்படிக்கைகளை ஒப்புக் கொண்டதுடன் அவர்களது உரிமைகள், கண்ணியம், மதிப்பு ஆகியவற்றை மதித்து நடப்பதாகவும் உறுதியளிக்கப்பட்டது. சமமான மற்றும் பாரபட்சமற்ற சட்டப்பாதுகாப்பு தங்களது சமய மற்றும் சமூக பழக்கவழக்கங்களை பின்பற்றுவதற்கான உரிமை ஆகியன இந்திய மக்களுக்கு வழங்கப்படும் என்று அந்த அறிக்கை கூறியது. விக்டோரியா அரசியின் அறிக்கை 1858 ஆம் ஆண்டு சட்டத்திற்கு செயல்வடிவம் கொடுப்பதாக அமைந்தது.
இந்திய கவுன்சில்கள் சட்டம் (1861)
![]() |
விக்டோரியா அரசி |
மாகாணங்களிலும் இதேபோல் சட்டமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. மாகாணங்களில் கூடுதல் உறுப்பினர்களின் எண்ணிக்கை நான்கு முதல் எட்டாக நிர்ணயிக்கப்பட்டது. முதன்முதலாக இந்தியர்களுக்கு சட்டமியற்றும் பணியில் பங்கெடுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டதால் அரசியலமைப்பின் வளர்ச்சியில் இச்சட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியாவில் சட்டமியற்றும் முறை மெதுவாகத் தொடங்கி, 1892 மற்றும் 1909 ஆம் ஆண்டு சட்டங்களின் மூலம் மேலும் வளர்ச்சிபெற்றது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அரசியலமைப்பின் வளர்ச்சி (1858 - 1947) , இந்திய, வரலாறு, அறிக்கை, அரசியலமைப்பின், விக்டோரியா, தலைமை, உறுப்பினர்களின், ஆண்டு, வளர்ச்சி, அரசியின், மேலும், கூடுதல், இவர்களுக்கு, சட்டமியற்றும், வாய்ப்பு, ஆளுநரின், கவுன்சில்கள், குழுவின், சட்டம், இந்தியா, இந்தியாவில், நிர்வாகக்