ஐரோப்பியர் வருகை
1600 ஆம் ஆண்டு ஆங்கிலேயக் கிழக்கிந்திய வணிகக்குழு ஏற்படுத்தப்பட்டது. அதற்கான பட்டயத்தில் இங்கிலாந்து அரசி எலிசபெத் கையெழுத்திட்டார். சூரத்தில் ஒரு ஆங்கிலேய வணிக மையம் அமைப்பதற்கு அனுமதி கோரி 1609 ஆம் ஆண்டு கேப்டன் ஹாக்கின்ஸ் ஜஹாங்கீரின் அவைக்கு வந்தார்.
ஆனால் போர்ச்சுகீசியரின் தூண்டுதலினால், முகலாயப் பேரரசர் ஆங்கிலேயருக்கு அனுமதி மறுத்தார். பின்னர் 1612 ஆம் ஆண்டு ஜஹாங்கீர் ஆங்கிலேயருக்கு பர்மன் அல்லது அனுமதிக் கடிதம் வழங்கினார். 1613ல் அவர்கள் சூரத்தில் வணிக நிலையத்தை நிறுவினர்.
![]() |
ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பனி கொடி |
![]() |
பிரான்சிஸ் டே |
1639ஆம் ஆண்டு பிரான்சிஸ் டே என்பவர் சென்னை நகரை நிறுவினார். அங்கு செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. 1690 ஆம் ஆண்டு ஜாப் சார்நாக் என்பவர் சுதநூதி என்ற விடத்தில் மற்றொரு ஆங்கிலேய வணிக நிலையத்தை ஏற்படுத்தினார். பின்னர் அதுவே கல்கத்தா நகரமாக வளர்ச்சியடைந்தது. அங்கு வில்லியம் கோட்டை கட்டப்பட்டது. பிற்காலத்தில், கல்கத்தா பிரிட்டிஷ் இந்தியாவின் தலைநகராகவும் விளங்கியது. இவ்வாறு, இந்தியாவில் ஆங்கிலேயக் குடியேற்றங்களில் பம்பாய், சென்னை, கல்கத்தா என்ற மூன்று மாகாணத் தலைநகரங்கள் நிறுவப்பட்டன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐரோப்பியர் வருகை , ஆண்டு, வரலாறு, ஆங்கிலேய, வணிக, இந்திய, ஐரோப்பியர், வருகை, இந்தியாவின், கல்கத்தா, இங்கிலாந்து, அனுமதி, கிழக்கிந்திய, என்பவர், பிரான்சிஸ், சென்னை, நிலையங்களை, கோட்டை, இந்தியா, கட்டப்பட்டது, நிறுவினர், அங்கு, நிலையத்தை, அமைப்பதற்கு, ஆங்கிலேயக், சூரத்தில், ஆங்கிலேயர்கள், வந்தார், பின்னர், ஆங்கிலேயருக்கு, வணிகக்குழு