ஆங்கிலேயரின் சீர்திருத்தங்கள்
1813 ஆம் ஆண்டு பட்டயச்சட்டம் இந்தியாவில் கல்வி வளர்ச்சிக்கென அரசு ஆண்டுக்கு ஒரு லட்சம் ஒதுக்க வகை செய்தது. பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் இச்சட்டம் இயற்றப்பட்டபோதே இது குறித்து நீண்ட விவாதம் நடைபெற்றது. சட்டம் இயற்றப்பட்டு இருபது ஆண்டுகள் ஆகியும் இது குறித்த புதிய விவாதங்கள் தோன்றிக்கொண்டே இருந்தன. எனவே, கல்விக்கென அரசு சல்லிக்காசும் செலவிடவில்லை.
அக்காலத்தில் பிரிட்டிஷ் அறிஞர்கள் இந்தியாவில் கல்வி வளர்ச்சி குறித்து இருவேறு கருத்துக்களை கொண்டிருந்தனர்.
![]() |
மெக்காலே பிரபு |
1829ல் தலைமை ஆளுநராக பதவியேற்ற வில்லியம் பெண்டிங் பிரபு இந்தியாவில் ஆங்கில மொழி வழிக்கல்வி வேண்டும் என வலியுறுத்தினார். 1835 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கல்விக் குழுவில் இடம் பெற்றிருந்த 10 உறுப்பினர்களும் இருவேறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருந்தனர். குழுவின் தலைவர் மெக்காலே பிரபு உள்ளிட்ட ஐந்து பேரும் ஆங்கில மொழி வழிக்கல்வியை ஆதரித்தனர். எஞ்சிய ஐந்து பேர் கீழ்த்திசை மொழிகளுக்காக வாதாடினர். இந்த முட்டுக்கட்டை நிலை பிப்ரவரி 2ம் நாள் வரை தொடர்ந்தது. அன்றுதான் குழுவின் தலைவரான மெக்காலே பிரபு ஆங்கில மொழி வழிக்கல்வியை ஆதரித்த தனது புகழ்பெற்ற குறிப்பை அறிவித்தார். பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புகளையும் மீறி 1835 மார்ச் 7ஆம் நாள் பெண்டிங் பிரபு தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றினார். இந்த தீர்மானத்தின்படி, இனிமேல் மேலை நாட்டு அறிவியல் மற்றும் இலக்கியங்களை ஆங்கிலமொழி வழியில் பயிற்றுவிப்பதற்கே அரசு நிதி செலவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆங்கிலேயரின் சீர்திருத்தங்கள் , வரலாறு, பிரபு, இந்திய, ஆங்கில, ஆங்கிலேயரின், மெக்காலே, வேண்டும், மொழி, அரசு, இந்தியாவில், கீழ்த்திசை, சீர்திருத்தங்கள், மேலை, நாள், குழுவின், பெண்டிங், ஐந்து, வழிக்கல்வியை, பிரிட்டிஷ், இந்தியா, கல்வி, குறித்து, கொண்டிருந்தனர், நாட்டு