1858 ஆம் ஆண்டுக்குப்பின் பிரிட்டிஷ் இந்தியா
இந்தியாவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பண்டைய சின்னங்களை பாதுகாப்பதில் கர்சன் ஆர்வம் கொண்டிருந்தார். அவருக்கு முன்பும் சரி பின்பும் சரி எந்தவொரு வைஸ்ராயும் தொல்பொருள் சின்னங்களின்பால் இவ்வளவு அக்கறை காட்டியதில்லை.
1904 ஆம் ஆண்டு பண்டைய தொல்பொருள் சின்னங்கள் சட்டத்தை அவர் கொண்டுவந்தார். அதன்படி அரசாங்கமும், உள்ளாட்சி அதிகாரிகளும் தங்கள் ஆட்சிப்பகுதியில் உள்ள தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த சின்னங்களை பாதுகாக்கவேண்டும். அவற்றை அழிப்பது குற்றம் என்றும் அறிவிக்கப்பட்டது.
வங்கப் பிரிவினை (1905)
1905 ஜூலை 4ஆம் நாள் வங்காளத்தை இருமாநிலங்களாக பிரிக்கும் நடைமுறை மேற்கொள்ளப்பட்டது. புதிதாக உருவாக்கப்பட்ட கிழக்கு வங்காளத்தில் அஸ்ஸாம், டாக்கா, ராஜகாஹி, சிட்டகாங் போன்ற பகுதிகள் அடங்கியிருந்தன. இதன் தலைநகர் டாக்கா. நிர்வாக வசதியை கர்சன் தமது வங்கப்பிரிவினைக்கு காரணமாகக் கூறினாலும், வங்காளத்திலிருந்த இந்துக்களையும் முஸ்லீம்களையும் பிளவுபடுத்துவதாக இது அமைந்தது. இதனால், நாடு முழுவதும் வங்கப் பிரிவினைக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றன. இதனால் தேசிய இயக்கம் மேலும் வலுப்பட்டது.
கர்சன் பிரபு பற்றிய மதிப்பீடு
தனது நாற்பதாவது வயதில் கர்சன் பிரபு இந்த பதவியை ஏற்றார். அவர் தனது சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு ஆய்வுக் குழுக்களை அமைத்து, அவற்றின் பரிந்துரைகளைச் கேட்டறிந்தார். இந்தியரின் பிரச்சினைகளை நன்கு ஆய்வு செய்தார். தொடக்கத்தில் அவர் புகழ்பெற்றிருந்தாலும் வங்கப்பிரிவினை அவற்றை விரைவிலேயே மங்கச் செய்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
1858 ஆம் ஆண்டுக்குப்பின் பிரிட்டிஷ் இந்தியா , வரலாறு, இந்தியா, கர்சன், தொல்பொருள், இந்திய, பிரிட்டிஷ், அவர், ஆண்டுக்குப்பின், பண்டைய, சின்னங்களை, இதனால், பிரபு, டாக்கா, தனது, முக்கியத்துவம், வாய்ந்த, அவற்றை, வங்கப்