வாரன் ஹோஸ்டிங்ஸ்
ஒழுங்கு முறை சட்டம் வணிகக் குழுவின் அரசை இந்தியாவிலும், தாய்நாட்டிலும் மாற்றியமைத்தது. அதில் இடம்பெற்றிருந்த முக்கிய விதிமுறைகள்; 1 இயக்குநர்கள் குழுவிலுள்ள உறுப்பினர்களின் பதவிக்காலம் ஓராண்டிலிருந்து நான்கு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது. அவர்களில் நான்கில் ஒரு பகுதியினர் ஆண்டுதோறும் ஓய்வு பெறுவர். ஓய்வு பெற்றவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படும் தகுதியை இழந்தவர்களாவர்.
2. வங்காள ஆளுநர் இனி வில்லியம் கோட்டையின் தலைமை ஆளுநர் என அழைக்கப்படுவார். அவரது பதவிக்காலம் ஐந்தாண்டுகளாகும்.
3. தலைமை ஆளுநருக்கு உதவியாக நான்கு பேர் கொண்ட ஒரு ஆலோசனைக்குழு ஏற்படுத்தப்பட்டது. பெரும்பான்மை முடிவுப்படியே அரசு செயல்படவேண்டும். தலைமை ஆளுநருக்கு முடிவுசெய்யும் வாக்குரிமை வழங்கப்பட்டது.
4. தலைமை ஆளுநர் மற்றும் ஆலோசனைக்குழுவிற்கு போர், அமைதி, உடன்பாடு போன்ற விவகாரங்களில் மற்ற மாகாணங்களை கட்டுப்படுத்த அதிகாரம் வழங்கப்பட்டது.
5. கல்கத்தாவில் ஒரு உச்சநீதிமன்றம் ஏற்படுத்த இச்சட்டம் வகை செய்தது. இதில் ஒரு தலைமை நீதிபதியும் மூன்று துணை நீதிபதிகளும் இருப்பர். இது தலைமை ஆளுநர் மற்றும் ஆலோசனைக் குழுவிற்கு அப்பாற்பட்டு தனித்து இயங்கும். 1774 ஆம் ஆண்டு அரச பட்டயத்தின்படி உச்ச நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டது.
6. தலைமை ஆளுநர், ஆலோசனைக்குழு, உறுப்பினர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட வணிகக்குழுவின் பணியாளர்கள் எவரும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பரிசுப் பொருட்கள், நிதி வெகுமதிகள் போன்றவற்றை பெறுவதற்கு இச்சட்டம் தடைவிதித்தது.
சட்டத்தின் நிறைகுறைகள்
வணிகக் குழுவின் அலுவல்களை நாடாளுமன்றம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தமையே ஒழுங்கு முறை சட்டத்தின் முக்கியத்துவமாகும். மேலும், இங்கிலாந்து நாடாளுமன்றம் இந்திய மக்களின் நலனில் அக்கறை கொண்டுள்ளது என்பதை இச்சட்டம் வெளிப்படுத்தியது. வணிகக் குழுவின் தன்னிச்சையான ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைத்தமையே இச்சட்டத்தின் மிகப்பெரிய நிறையாகும். இந்தியாவின் எதிர்கால நிர்வாகத்திற்கும் சட்டங்களுக்கும் ஒரு வரைச்சட்டமாக இது விளங்கியது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வாரன் ஹோஸ்டிங்ஸ் , தலைமை, வரலாறு, ஆளுநர், இந்திய, வாரன், இச்சட்டம், வணிகக், குழுவின், ஹோஸ்டிங்ஸ், சட்டத்தின், ஏற்படுத்தப்பட்டது, ஆலோசனைக்குழு, வழங்கப்பட்டது, நாடாளுமன்றம், ஆளுநருக்கு, உச்ச, இந்தியா, விதிமுறைகள், முறை, பதவிக்காலம், நான்கு, ஒழுங்கு, ஓய்வு, இந்தியாவின்