வில்லியம் பெண்டிங் பிரபு
1828 ஆம் ஆண்டு வில்லியம் பெண்டிங் பிரபு தலைமை ஆளுநராக பதவி ஏற்றார். 1774ல் பிறந்த அவர் ஒரு போர் வீரராக வாழ்க்கையைத் தொடங்கினார். தனது 22வது வயதிலேயே நாடாளுமன்ற உறுப்பினரானார். 1603 ஆம் ஆண்டு சென்னையின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அப்போது சர் தாமஸ் மன்றோ செயல்படுத்திய வருவாய் சீர்திருத்தங்களை ஆதரித்தார். 1806ஆம் ஆண்டு வேலூர்க் கலகம் காரணமாக அவர் திருப்பியழைக்கப்பட்டார். இருப்பினும், மீண்டும் அவரை தலைமை ஆளுநர் பதவிக்கு நியமனம் செய்தது அவரது புகழுக்கு தக்க சான்றாகும். தலைமை ஆளுநராக, பெண்டிங் ஒரு முற்போக்கு சீர்திருத்த சகாப்தத்தையே தொடங்கி வைத்தார் எனலாம்.
இந்திய மக்களின் நலனைப் பேணுவதே இந்தியாவில் ஆளும் பிரிட்டிஷாரின் தலையாய கடமை என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்ட முதல் தலைமை ஆளுநர் பெண்டிங் என்பதில் ஐயமில்லை.
வில்லியம் பெண்டிங் பிரபு |
வில்லியம் பெண்டிங் இந்திய அரசுகளைப் பொறுத்தவரை, ஆக்கிரமிப்பு அற்ற, தலையிடாக் கொள்கையையே பின்பற்றினார். அப்படி அவர் இந்திய அரசுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டிருப்பாரானால் அது அங்கு நிலவிய முறைகேடான ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரவே தவிர, எந்த நிலப் பகுதியையும் இணைக்கும் எண்ணத்தில் அல்ல.
மைசூர்
மைசூரில், வெல்லெஸ்லியால் இந்து அரசர் மூன்றாம் கிருஷ்ணராஜா பதவியில் அமர்த்தப்பட்டிருந்தார். தொடக்கத்தில் மைசூர் அரசர் அவரது திறமையான அமைச்சர் பூரணய்யாவின் வழிகாட்டுதலுடன் நன்கு ஆட்சி புரிந்தார். ஆனால், முழு ஆட்சிப் பொறுப்பையும் அவர் மேற்கொண்ட போதுதான் அவரது திறமையின்மை வெளிப்பட்டது. அந்த அரசில் வாழ்ந்த குடியானவர்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வந்தனர். அவற்றுக்கான தீர்வுகள் காணப்படவில்லை. எனவே, 1830ல் குடியானவர்கள் கலகத்தில் ஈடுபட்டனர். சென்னை ராணுவத்தின் துணை கொண்டு அக்கலகம் ஒடுக்கப்பட்டது. பின்னர், பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மைசூரின் ஆட்சிப் பொறுப்பை தாமே மேற்கொண்டனர். மைசூரில் ஒரு ஆணையாளர் நியமிக்கப்பட்டார். அரசருக்கு ஊதியம் அளிக்கப்பட்டது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வில்லியம் பெண்டிங் பிரபு , பெண்டிங், இந்திய, வில்லியம், வரலாறு, பிரபு, தலைமை, அவர், கொண்டு, ஆண்டு, அவரது, ஆளுநராக, அரசர், ஆட்சிப், குடியானவர்கள், மைசூரில், மைசூர், ஆளுநர், இந்தியா, நியமிக்கப்பட்டார்