ஹேஸ்டிங்ஸ் பிரபு
பேஷ்வா இரண்டாம் பாஜிராவ் |
மராட்டியக் கூட்டிணைவின் வீழ்ச்சி
மராட்டியக் கூட்டிணைவை முறியடித்தது ஹேஸ்டிங்ஸ் பிரபுவின் மூன்றாவது முக்கிய சாதனையாகும். மூன்றாம் பானிப்பட்டுப் போர் (1761) அதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டு ஆங்கிலேய மராட்டியப் போர்களினால் மராட்டியர்கள் வலிமை குன்றியிருந்தனர். ஆனால் முற்றிலும் அழிக்கப்படவில்லை. தங்களுக்குள்ளேயே போரிட்டுக் கொண்டிருந்த அவர்கள், வலிமையும் திறமையும் குன்றிய வாரிசுகளால் மேலும் பலம் இழந்தனர். மராட்டியத் தலைவர்களிலேயே சக்திமிக்கவர்களான போன்ஸ்லே, கெயிக்வார், சிந்தியா, ஹோல்கர் மற்றும் பேஷ்வா ஆகியோருக்கிடையே ஒற்றுமையின்றி ஒருவருக்கொருவர் பொறாமையுடன் பூசல்கள் நிறைந்து காணப்பட்டனர்.
பேஷ்வா இரண்டாம் பாஜிராவ் மராட்டியக் கூட்டிணைவின் தலைவராக விரும்பினார். அதே சமயம் பிரிட்டிஷாரின் கட்டுப்பாட்டிலிருந்தும் விடுதலை பெற முயற்சித்தார். அவரது முதலமைச்சரான திரிம்பக்ஜியும் இதனை ஊக்குவித்தார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஹேஸ்டிங்ஸ் பிரபு , வரலாறு, ஹேஸ்டிங்ஸ், இந்திய, பிரபு, பேஷ்வா, மராட்டியக், பிரிட்டிஷாரின், கூட்டிணைவின், சிந்தியா, இரண்டாம், பாஜிராவ், ஆண்டு, ஆங்கிலேய, இந்தியா, பிண்டாரிகள், கொள்ளையடித்தனர், வாக்கில், வாசில்