டல்ஹவுசி பிரபு
அமைதி வழியில் நாடுகளை இணைப்பதற்கு ஏதேனும் தருணம் கிடைக்குமானால் அதை டல்ஹவுசி தக்க வாப்ப்பாக பயன்படுத்திக் கொண்டார். இந்தியாவில் கிழக்கிந்திய வணிகக்குழு வலிமை பெற்ற அரசாக உருவெடுத்து வந்தது. இந்திய ஆட்சியாளர்களுடன் அது பல ஒப்பந்தங்களை செய்து கொண்டது. அவர்களையும் அவர்களது வாரிசுகளையும் ஆதரிப்பதாக உறுதிகொடுத்து அதற்குப்பதில் பல சலுகைகளை வணிகக் குழுவின் ஆட்சி பெற்று வந்தது. இத்தகைய ஒப்பந்தங்களை பிரிட்டிஷார் விரும்பியதால், டல்ஹவுசி மேலும் வலிமை பெற விரும்பினார்.
இந்து சட்டப்படி ஒருவர் தனக்கு ஆண் வாரிசு இல்லையெனில், ஒரு புதல்வரை தத்தெடுத்துக்கொண்டு தனது சொத்துக்களை அவருக்கு உரிமையாக்கலாம். ஆனால் தலைமை அரசால் (பிரிட்டிஷ் அரசு) பாதுகாக்கப்பட்டுவரும் ஒரு இந்து அரசர் தனக்குப் பிறகு அரச பதவியேற்பதற்கு ஒரு ஆண்வாரிசை தத்து எடுக்க முடியுமா என்ற கேள்வி எழுந்தது. பொதுவாக, பிரிட்டிஷ் அரசின் அனுமதியோடுதான் அவ்வாறு தத்து எடுப்பது வழக்கமாக இருந்து வந்தது.
டல்ஹவுசியின் கொள்கைப்படி பிரிட்டிஷ் அரசு அவ்வாறு தத்து எடுப்பதற்கு அனுமதி மறுக்குமானால், அந்த அரசுக்கு வாரிசு இல்லாமல் போகும். எனவே வாரிசு இல்லா அரசு பிரிட்டிஷ் ஆட்சியின் ஒரு பகுதியாக இணைக்கப்படும் என்று டல்ஹவுசி கருதினார். ஒரு தனி நபர் தத்து எடுத்து தனது தனிப்பட்ட சொத்துக்களுக்கு அவரை வாரிசு ஆக்குவதற்கும் தத்து எடுக்கப்பட்டவர் நாட்டை ஆளும் உரிமை பெறுவதற்கும் வேறுபாடு உள்ளது என்று டல்ஹவுசி வாதிட்டார். டல்ஹவுசியின் இக்கொள்கை வாரிசு இழப்புக் கொள்கை என அழைக்கப்படுகிறது,
தேடல் தொடர்பான தகவல்கள்:
டல்ஹவுசி பிரபு , டல்ஹவுசி, வாரிசு, வரலாறு, இந்திய, தத்து, பிரிட்டிஷ், அரசு, பிரபு, வந்தது, அவ்வாறு, டல்ஹவுசியின், தனது, வலிமை, கிழக்கிந்திய, இந்தியா, வணிகக்குழு, கொள்கை, ஒப்பந்தங்களை, இந்து