1857 ஆம் ஆண்டு பெருங்கலகம்
சமூக காரணங்கள்
இந்தியர்கள்மீது ஆங்கிலேயர் காட்டிய அகந்தையும் தாறுமாறான தாக்குதல்களும் பொதுமக்களை பெரிதும் பாதித்தன. கிறித்துவ சமயப்பரப்பாளர்களின் நடவடிக்கைகள் இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களிடையே பெரும் அச்சத்தை தோற்றுவித்தன. அவர்கள் ஏற்படுத்திய கல்விக் கூடங்களில் கீழ்த்திசை பாடங்களுக்குப் பதில் மேலை நாட்டுக்கல்வியும் பண்பாடும் பின்பற்றப்பட்டன. இந்தியக் குடிமக்கள் தங்களது சமுதாய அடையாளங்களை இழந்து வருவதாகக் கருதினர்.
ராணுவ காரணங்கள்
பிரிட்டிஷ் ராணுவத்திலிருந்த இந்திய வீரர்களிடையே பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான வெறுப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. குறைந்த ஊதியம் பதவி உயர்வுக்கான சாத்தியக் கூறுகள் இல்லாமை ஆகியவற்றால் அவர்கள் பெரிதும் ஏமாற்றமடைந்தனர். இந்திய சிப்பாய்களின் சமூகப் பழக்கவழக்கங்களுக்கும், சமய உணர்வுகளுக்கும் பிரிட்டிஷ் உயர் அதிகாரிகள் சற்றும் மதிப்பளிக்கவில்லை. பொதுவாக, தங்கள் எஜமானர்களுக்கு நம்பிக்கையானவர்களாக அவர்கள் இருந்தபோதிலும் இத்தகைய காரணங்களால் அவர்கள் கலகத்தில் ஈடுபடும்படி ஆயிற்று.
1857 ஆம் ஆண்டு கலகத்திற்கு முன்னோடியாக விளங்கிய 1806 ஆம் ஆண்டு வேலூர்க் கலகம் பிரிட்டிஷ் அதிகாரிகளின் மனப்பாங்கை வெளிப்படுத்துவதாக அமைந்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வரலாறு, இந்திய, ஆண்டு, பிரிட்டிஷ், பெருங்கலகம், காரணங்கள், இந்தியா, இந்தியாவில், பண்ணை