வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 60
மலை மீதிருந்து வரும் சிற்றருவியின் நீரை, மரத்தால் செய்யப்பட்ட தூம்பை வைத்து வேறு பக்கம் திருப்பிவிட்டிருந்தனர். தாகத்தோடு சென்று அந்த ஆடுகள் அந்நீரைப் பருகத் தொடங்கின. பாதை ஓரத்தில் தொங்கிக் கொண்டிருந்து திராட்சைக் குலைகளைப் பார்த்த வாலிபன் ஒரு கொத்தைப் பறித்தான். ஆனால் அவை பழுக்காத காய்கள்; அவைகள் பழுப்பதற்கு இன்னும் ஒரு மாதத்திற்கு மேலாகும். ஆயினும் களைத்திருந்த அந்த வாலிபனுக்கு அவை ரொம்ப ருசியாய் இருந்தன. கொத்திலிருந்து ஒவ்வொன்றாய் எடுத்துத் தன் வாயில் போட்டுக் கொண்டான்.
நீர் பருகிய ஆடுகள் பக்கத்தே வளர்ந்து பசுமையாயிருக்கும் புற்களை மேய்ந்து கொண்டிருந்தன. அந்தச் சிவப்பு நாய் தன் எஜமானனையோ ஆடுகளையோ பின்பற்றாமல் தண்ணீருக்குள் உட்கார்ந்து கொண்டது. அதனுடைய வயிறும் தொங்கிக் கொண்டிருக்கும் நாக்கும் ஆடும் வேகத்தைப் பார்த்தால் வெப்பம் அதிகம் என்பதை உணர்த்துவது போல் இருந்தது. தூம்பு வழியாக விழுந்து கொண்டிருக்கும் தண்ணீரைக் குடித்துத் தன் தாகத்தைத் தணித்துக் கொண்ட வாலிபன், கைகளினால் நீரை அள்ளித் தன் முகத்தையும் கழுவிக் கொண்டான். அவனுடைய ரோஜா நிறக் கன்னங்களையும், சிவந்த உதட்டையும் மறைப்பதற்குப் பொன்னிற ரோமங்கள் இப்போதுதான் அரும்பிக் கொண்டிருக்கின்றன. ஆடுகள் ஆவலாய் மேய்வதைப் பார்த்த வாலிபன் தன் மூங்கில் கூடைக்குப் பக்கத்தில் உட்கார்ந்தான். இரண்டு காதுகளையும் உயர்த்தித் தன்னையே கூர்ந்து நோக்கிக் கொண்டிருக்கும் அந்தச் சிவப்பு
நாயின் பார்வையைப் புரிந்துகொண்ட வாலிபன், கூடையிலிருந்து சில உலர்ந்த மாமிசத் துண்டுகளையெடுத்து இடையில் இருந்த கூர்மையான கத்தியால் அதை நறுக்கி நறுக்கி நாய்க்குக் கொடுத்துக் கொண்டிருந்ததோடு, சில துண்டுகளைத் தன் வாயிலும் போட்டுக் கொண்டான். இந்த நேரத்தில் மரமணியின் “கடக் கடக்” என்ற சப்தம் இவன் செவிகளில் விழுந்தது. சப்தம் வரும் திசை நோக்கித் தன் பார்வையைச் செலுத்தினான். கொஞ்ச தூரத்தில் புதர்களின் இடையே ஒரு கழுதை வருவது தெரிந்தது. கூர்ந்து கவனித்தான். ஒன்றன் பின் ஒன்றாக இன்னும் சில கழுதைகளும் அவற்றின் பின்னே ஒரு யுவதியும் வருவதைப் பார்த்தான். இவனைப் போலவே அவளும் உடையணிந்திருந்தாள். அவளுடைய முதுகுப் பக்கமும் ஒரு கூடை தொங்கிக் கொண்டிருந்தது. இவற்றைப் பார்த்ததும் தானாகவே அவனுடைய வாய் சீட்டியடிக்கத் தொடங்கி விட்டது. எதையாவது யோசிக்கத் தொடங்கி விட்டால் அவனுடைய வாய் தானாகவே சீட்டி அடிக்கத் தொடங்கி விடும். சீட்டி சப்தம் கேட்ட யுவதி அந்தத் திசையை நோக்கினாலும் கூடப் புதர்கள் மறைத்திருந்ததால் வாலிபனுடைய உருவத்தை அவள் பார்க்க முடியவில்லை. புதர்களின் ஊடே நாற்பது-ஐம்பது கஜ தூரத்தில் அவள் வந்துகொண்டிருக்கும் பொழுதே அவளுடைய அழகிய தோற்றம் அவனுடைய இதயத்தில் பதிந்து விட்டது. அவளுடைய அவயவங்களின் முழு அழகையும் நெருங்கிப் பார்க்கும் முன்னாலேயே, அவள் எங்கு போகவேண்டியவள் என்பதைத்
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 60, புத்தகங்கள், அவனுடைய, பக்கம், வாலிபன், சப்தம், ஆடுகள், தொங்கிக், அவளுடைய, கங்கை, அவள், தொடங்கி, கொண்டிருக்கும், கொண்டிருந்தது, கொண்டான், அந்த, வால்காவிலிருந்து, தூரத்தில், புதர்களின், வாய், சீட்டி, விட்டது, நறுக்கி, தானாகவே, இன்னும், வரும், சென்று, பின்னே, சிறந்த, நீரை, பார்த்த, சிவப்பு, அந்தச், போட்டுக், கூர்ந்து