வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 295
“கமல்! இங்கே யார் வீட்டிற்குப் போனாலும் சிறிதும் தயக்கமின்றி கிளாஸு ம் போத்தலும் கொண்டு வந்து வைத்து விடுகிறார்கள்!”
“பாரத நாட்டிலே பாதுஷாவோடு ஒன்றாகத் தண்ணீர் குடிக்கிறார் என்பதற்காகத்தான் என் தந்தையைத் தூற்றுகிறார்கள்!”
“என்னுடைய தாதியர்கள், ராஜபுத்ரப் பெண்கள் நாற்றம் பிடித்தவர்கள் என்றும், அவர்கள் வீட்டிலே பன்றிக்கறி சமைக்கப்படுவதாகவும் எனக்குச் சொல்லிக் கொடுத்தார்கள். அந்தக் குருடர்கள் இங்கு வந்து பார்த்தார்களானால், இந்த உலகத்தில் கீழ் ஜாதி-மேல் ஜாதி என்பது கிடையாது என்று தெரிந்து கொள்வார்கள்.”
“உண்பதிலும், குடிப்பதிலும் வேற்றுமை காட்டாத உலகம் இது!”
“பிளாரன்ஸ் முழுவதும் ஒரே ஐக்கியமாயிருக்கிறது. பாரதமும் இந்த மாதிரி ஐக்கியப்படுமா கமல்?”
“நாம் கடலைக் கடந்தால்-சமுத்திரத்தை வெற்றி கண்டால், அது நடைபெறக்கூடும்!”
“சமுத்திர வெற்றி!”
“வெனிஸ் நகரம் வெற்றி கண்ட நகரம் சுரையா! வெனிஸ் நகரத்தின் இந்தத் தெருக்கள், இந்த உயர்ந்த மாளிகைகள் யாவும் சமுத்திர வெற்றியின் பலன். இன்று கடல் வெற்றியிலே வெனிஸ் நகரம் தனித்து நிற்கவில்லை. அதனோடு போட்டியிடும் தேசங்கள் பல இருக்கின்றன. ஆனால், இனிக் கடலை ஜெயிப்பவர்கள்தான் உலகத்தை ஆள்வார்களென்று எனக்குத் தெளிவாகத்
தெரிகிறது; இதைப் பற்றி என் இதயத்திலே சிந்தனை முளைத்ததற்காக நான் பெருமைப்படுகிறேன்.”
“நீ ஏதேதோ புத்தகங்களை இரவெல்லாம் படித்துக் கொண்டிருக்கிறாயே! இங்கு புத்தகங்கள் எவ்வளவு சுலபமாகக் கிடைக்கின்றன!”
“நம் நாட்டிலும் கண்ணாடி இருக்கிறது; காகிதம் இருக்கிறது. இரும்புத் தொழிலிலே நிபுணர்களிருக்கிறார்கள். ஆயினும், இதுவரை புத்தகம் அச்சிட நமக்குத் தெரியாது. அச்சு யந்திரங்கள் நம் நாட்டிலும் ஏற்பட்டுவிட்டால் அறிவு எவ்வளவு சுலபமாகப் பரவத் தொடங்கிவிடும்! நான் படித்துக் கொண்டிருக்கும் இந்தப் புத்தகங்களும், மாலுமிகளோடு ஏற்பட்டுள்ள பழக்கமும், கடலை ஜெயிப்பவர்கள்தான் இந்த உலகத்தை ஜெயிக்கப் போகிறார்களென்பதை எனக்கு நிச்சயப்படுத்திவிட்டன. இந்தப் பரங்கியர்கள் குளிப்பது-துவைப்பதில் அலட்சியமாயிருப்பதைக் கருதி, நம் நாட்டினர் அவர்களை அழுக்குப் பிடித்த காட்டுமிராண்டிகள் என்று கூறுகிறார்கள். ஆனால், இவர்களுடைய அறிவுத்தாகத்தையும் ஆர்வத்தையும் கண்டு, இவர்களைப் பாராட்டாமலிருக்க முடியாது. இவர்கள் பூகோளத்தைப் பற்றி கதை கட்டவில்லை. உலக முழுவதை
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 295, புத்தகங்கள், வெற்றி, பக்கம், நகரம், கங்கை, வால்காவிலிருந்து, படித்துக், நான், பற்றி, எவ்வளவு, இந்தப், இருக்கிறது, நாட்டிலும், உலகத்தை, கடலை, வந்து, சுரையா, இங்கு, ஜாதி, சிறந்த, வெனிஸ், ஜெயிப்பவர்கள்தான்