வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 262
“அப்பா! இது ஹரிச்சந்திரனின், இதய மரியாதைக்குரிய விஷயம். அறிவு சம்பந்தப்பட்ட விஷயத்தில் பிர்மாவின் வாக்கியத்தைக் கூட ஹரிச்சந்தி ரன் உரைகல்லில் உரைத்துப் பார்க்காமல் ஏற்றுக் கொள்ளமாட்டான்.”
“குமார்! உன்னைப் பெற்றதால் ககடுவார் வம்சம் மட்டுமல்ல, ஹிந்து சமுதாயமே பெருமையடைகிறது.”
“அப்பா! சக்ரபாணியைப் பெற்றதால்... கொஞ்சம் தண்ணீர்!”
பாமா உடனே தண்ணீரைக் கொண்டு வந்து கொடுத்தாள். படகு புறப்பட்டு விட்டது.
“நாம் காசிக்குப் போய்க் கொண்டிருக்கிறோம் குமார்! இரண்டாவது தலைநகரத்திற்கு! சேனாதிபதி மாதவன் சேனைகளுக்கு உத்தரவுகள் கொடுத்துவிட்டான். அவைகள் இங்கேயே துருக்கர்களைத் தடுத்து நிறுத்தும். நாம் காசிக்குப் போய், ககடுவார் வம்சத்தின் ராஜ்யலட்சுமியைக் காப்பாற்று வதற்காகச் சேனை தயார் செய்வோம்.”
“இல்லை, அப்பா. நீங்கள் முன்பெல்லாம் சொல்வது போல ஹிந்து ராஜ்யலெட்சுமியைக் காப்பாற்றுவதற்காகச் சேனைகள் தயாரிப்போம். இப்பொழுது மீட்கப்பட வேண்டியது ஹிந்து ராஜலெட்சுமிதான், அதற்காக
எல்லா ஹிந்துக்களின் தோள்பலத்தையும் உபயோகிக்க வேண்டும்.”
“ஆம்; பறையன்-பிராமணன் என்ற பேதத்தையும் ஒழித்து.”
“ஆம்; என்னுடைய துரோண குருவே!”
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 262, புத்தகங்கள், பக்கம், ஹிந்து, கங்கை, வால்காவிலிருந்து, காசிக்குப், “ஆம், “அப்பா, சிறந்த, பெற்றதால், ககடுவார்