வால்காவிலிருந்து கங்கை வரை - வாசகர்களுக்கு
இந்தச் சிறந்த நூலைத் தமிழிலே செய்ய வேண்டுமென்று நாள்தோறும் வளர்ந்து வந்த ஆசையே, துணிவாக இந்நூலை மொழி பெயர்க்கும் வேலையில் என்னை ஈடுபடும்படிச் செய்தது. முடிந்தவரை சாதாரணத் தமிழ் மக்களும் புரிந்து கொள்ளும்படி எழுத முயற்சி செய்திருக்கிறேன். ஆனால், விஷயத்தின் கௌரவமும் ராகுல்ஜியின் அளவற்ற அறிவுச் செல்வத்தை ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்குக் கொண்டு வருவதில் உள்ள சிரமமும் சேர்ந்து, நடையை இன்னும் எளிதாக ஆக்க முடியாமற் செய்து விட்டன./> இந்நூலை மொழி பெயர்த்து எழுதத் தொடங்கியது முதல், ஒப்பு நோக்கிப் பிழை திருத்தி அச்சிட்டுப் புத்தக உருவில் வெளிவரும் வரை, எனது நண்பர் திரு. ராம ஷண்முகம் அவர்கள் பூரணப் பொறுப்பெடுத்து ஒத்துழைத்தார். அவருக்கு என் உளம் நிறைந்த நன்றி.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - வாசகர்களுக்கு, புத்தகங்கள், வாசகர்களுக்கு, சிறந்த, கங்கை, வால்காவிலிருந்து, மொழி, இந்நூலை