சத்ய சோதனை - பக்கம் 85
ஏறக்குறைய அந்தச் சமயத்தில்தான் பிராட்லா காலமானார். அவர் சடலத்தை வோகிங் கல்லறையில் அடக்கம் செய்தனர். இச்சவ அடக்கச் சடங்கிற்கு நானும் போயிருந்தேன். லண்டனில் இருந்த இந்தியர் எல்லோருமே அதற்குச் சென்றிருந்தனர் என்று நம்புகிறேன். அவருக்குக் கடைசி மரியாதை செய்வதற்காகப் பாதிரிமார் சிலரும் வந்திருந்தனர். அச்சடங்கிலிருந்து திரும்பும்போது ரயிலுக்காக நிலையத்தில் நாங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. அப்பொழுது அக்கூட்டத்தில் இருந்த ஒரு தீவிர நாத்திகர், பாதிரிகளில் ஒருவரைக் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்.
“சரி, கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று நீங்கள் நம்புகிறீர்கள் அல்லவா?” என்று அவர் கேட்டார்.
“ஆம்” என்று அடக்கமான குரலில் அந்த நல்ல மனிதர் பதில் சொன்னார்.
“இப்பூமியின் சுற்றளவு 28,000 மைல்கள் என்றும் நீங்கள் ஒப்புக் கொள்ளுகிறீர்கள் அல்லவா?” என்று அந்த நாத்திகர் தன்னம்பிக்கையுடன் சிரித்துக்கொண்டே கேட்டார்.
“ஆமாம்” என்றார் பாதிரியார்.
“அப்படியானால், உங்கள் கடவுளின் உருவம் என்ன, அவர் எங்கே இருப்பார் என்பதையும் தயவு செய்து சொல்லுங்கள்.”
“சரி; நம்மால் அறிய மாத்திரம் முடிந்தால், அவர் நம் இருவர் உள்ளங்களிலும் வீற்றிருக்கிறார்.”
“இதோ பாருங்கள் என்னைக் குழந்தை என்று நினைத்துவிட வேண்டாம்” என்றார், அத்தீவிரவாதி. அதோடு வெற்றிப் பார்வையுடன் எங்களை நோக்கினார்.
பாதிரியாரோ, அடக்கத்துடன் மௌனமாக இருந்து விட்டார். இந்த வாக்குவாதம் நாத்திகத்திடம் எனக்கு இருந்த வெறுப்பை மேலும் அதிகமாக்கி விட்டது.
21. திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை |
ஹிந்து தருமத்தைக் குறித்தும் மற்ற உலக சமயங்களைப் பற்றியும் ஓரளவுக்குத் தெரிந்து கொண்டிருந்தேன். என்றாலும், எனக்கு ஏற்படும் சோதனைகளிலிருந்து என்னைக் காப்பாற்ற அவை போதா என்பதையும் நான் அறிந்திருக்க வேண்டும். சோதனைகளிலிருந்து ஒருவன் சமாளித்து நிற்கும்படி செய்வது
தேடல் தொடர்பான தகவல்கள்:
சத்ய சோதனை - பக்கம் 85, அவர், புத்தகங்கள், சத்ய, பக்கம், இருந்த, சோதனை, என்பதையும், என்றார், என்னைக், சோதனைகளிலிருந்து, எனக்கு, அந்த, “சரி, நாத்திகர், சிறந்த, விட்டார், நீங்கள், அல்லவா, கேட்டார்