சத்ய சோதனை - பக்கம் 83
அதே சமயத்தில் மான்செஸ்டரிலிருந்து வந்த ஓர் உத்தமமான கிறிஸ்தவரை சைவ உணவு விடுதி ஒன்றில் நான் சந்தித்தேன். கிறிஸ்தவத்தைப் பற்றி அவர் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். ராஜ்கோட்டில் கிறிஸ்தவப் பாதிரிமார் நடத்தி வந்த பிரச்சாரத்தைக் குறித்த என்னுடைய பழைய நினைவுகளை அவரிடம் கூறினேன். அதைக் கேட்டு, அவர் மனவேதனை அடைந்தார். ‘ நான் சைவ உணவு மாத்திரமே சாப்பிடுபவன் ; மதுபானமும் அருந்துவதில்லை. கிறிஸ்தவர்கள் அநேகர் மாமிசம் சாப்பிடுகிறார்கள் ; குடிக்கிறார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், மது, மாமிசம் சாப்பிடும்படி எங்கள் வேதம் சொல்லவில்லை; தயவுசெய்து பைபிளைப் படியுங்கள்’ என்றார். அவருடைய யோசனையை ஏற்றுக் கொண்டேன். அவர் எனக்குப் பைபிள் பிரதி ஒன்றும் வாங்கிக்கொடுத்தார். அவரே பைபிள் பிரதிகளை விற்று வந்ததாகவும், படங்கள், அரும்பத அகராதி முதலிய விளக்கங்கள் அடங்கிய ஒரு பைபிள் பிரதியை அவரிடம் நான் வாங்கியதாகவும் எனக்குக் கொஞ்சம் நினைவிருக்கிறது. அதைப் படிக்க ஆரம்பித்தேன். ஆனால், பழைய ஏற்பாட்டைப் படித்துப் புரிந்துகொள்ள என்னால் இயலவில்லை. ஆதி ஆகமத்தையும் அதையடுத்த அத்தியாயங்களையும் படிக்க ஆரம்பித்ததுமே எனக்குத் தூக்கம் வந்துவிடும். ஆனால், பைபிளைப் படித்திருக்கிறேன் என்று
தேடல் தொடர்பான தகவல்கள்:
சத்ய சோதனை - பக்கம் 83, நான், புத்தகங்கள், அவர், எனக்கு, சத்ய, பைபிள், பிளாவட்ஸ்கி, பக்கம், சோதனை, அவரிடம், பழைய, மாமிசம், பைபிளைப், படிக்க, உணவு, வந்த, இன்னும், அதைக், சிறந்த, ஹிந்து, சமயத்தில், இந்நூல், ஸ்ரீமதி