சத்ய சோதனை - பக்கம் 75
தென்னாப்பிரிக்காவில்தான் இந்தக் கூச்சம் என்னை விட்டுப்போயிற்று. என்றாலும், அங்கும் அது முற்றும் போய்விடவில்லை. முன்னால் தயார் செய்து கொள்ளாமல் பிரசங்கம் செய்வதென்பதும் என்னால் முடியாது. முன்பின் தெரியாத ஒரு கூட்டத்தின் முன்னால் பேசுவதற்கு நான் தயங்கினேன். முடிந்தால் பிரசங்கம் செய்யாமலும் தப்பித்துக் கொண்டு விடுவேன். இன்றும்கூட நண்பர்களின் கூட்டத்தில் வெறும் பேச்சுப் பேசிக்கொண்டிருக்க என்னால் முடியும் என்று நான் நினைக்கவில்லை ; அப்படிச் செய்யவும் மாட்டேன்.
ஆனால், இன்னும் ஒன்றையும் நான் சொல்லவே வேண்டும். என் உடம்புடன் ஒட்டியதாயிருந்த கூச்சத்தினால் சில சமயங்களில் என்னைக் குறித்துப் பிறர் நகைப்பதற்கு இடம் வைத்துக்
தேடல் தொடர்பான தகவல்கள்:
சத்ய சோதனை - பக்கம் 75, நான், பிரசங்கம், புத்தகங்கள், சோதனை, சத்ய, பக்கம், மும்முறை, சொன்னார், முன்னால், என்னால், செய்ய, கொண்டு, வைத்துக், எழுந்து, இல்லாது, சிறந்த, ஆகையால், பேசுவதற்கு, வைத்திருந்தேன், பேச்சு