சத்ய சோதனை - பக்கம் 73
என்னைப் போன்ற அபிப்பிராயம் கொண்ட மற்றும் சிலரும் கமிட்டியில் இருந்தனர். ஆயினும் என் சொந்த அபிப்பிராயத்தைக் கூறிவிட வேண்டியது என்னைப் பொறுத்தவரையில் என் கடமை என்று உணர்ந்தேன். அதை எப்படிச் செய்வது என்பதுதான் பிரச்னை. கூட்டத்தில் பேசும் தைரியம் எனக்கு இல்லை. ஆகையால் என் எண்ணங்களையெல்லாம் எழுதிவிடுவது என்று முடிவு செய்தேன். அவ்வாறே எழுதி, என் சட்டைப் பைக்குள் வைத்துக்கொண்டு கூட்டத்திற்குப் போனேன். ஆனால், எழுதி வைத்திருந்ததைப் படிக்கும் துணிவுகூட எனக்கு வரவில்லை என்றே எனக்கு ஞாபகம். தலைவர் வேறொருவரைக் கொண்டு அதைக் கூட்டத்தில் படிக்கச் செய்தார். முடிவில் டாக்டர் அல்லின்ஸனின் கட்சி தோற்றுப் போயிற்று. இவ்விதம் இது போன்ற முதல் போராட்டத்திலேயே தோற்கும் கட்சியில் சேர்ந்தவனாக நான் இருந்ததைக் கண்டேன். என்றாலும் என் கட்சி நியாயமானது என்ற திருப்தி எனக்கு இருந்தது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அந்தக்
தேடல் தொடர்பான தகவல்கள்:
சத்ய சோதனை - பக்கம் 73, புத்தகங்கள், எனக்கு, டாக்டர், சங்கத்தின், சத்ய, நான், பக்கம், சோதனை, அவருடைய, ஸ்ரீ, ஒழுக்கக், ஒருவர், சொந்த, என்னைப், எழுதி, கட்சி, கூட்டத்தில், பொறுத்தவரையில், ஆகையால், இல்லை, என்றே, அபிப்பிராயம், நோக்கம், உணவாளர், சிறந்த, அல்லின்ஸன், என்றும், கருதினேன், நானும், கருத்து, அவரை, ஒழுக்க