சத்ய சோதனை - பக்கம் 55
ஆனால் நான் பிடிவாதமாக இருந்தேன். நாள் தவறாமல் அவர் இதைக் குறித்து என்னிடம் தர்க்கம் செய்துகொண்டே இருப்பார். முடியாது என்று எப்பொழுதும் அவருக்குப் பதில் சொல்லி விடுவேன். அவர் தர்க்கம் செய்யச் செய்ய நானும் அதிகப் பிடிவாதக்காரனாவேன். கடவுளின் பாதுகாப்பைக் கோரித் தினமும் பிரார்த்திப்பேன். அதை அடையவும் அடைவேன். கடவுளைப் பற்றிய ஞானம் அப்பொழுதே எனக்கு இருந்தது என்பதல்ல; நம்பிக்கை தான் அது. எனக்குச் செவிலித் தாயாக இருந்த அந்த நல்ல ரம்பா விதைத்த நம்பிக்கையின் விதையே வேலை செய்து வந்தது.
ஒரு நாள் அந்த நண்பர், பெந்தாம் எழுதிய ‘பயன்படுவதன் தத்துவம் (Theory of Utility)’ என்ற நூலை எனக்குப் படித்துக் காட்டினார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அதன் நடை, நான் புரிந்துகொள்ள முடியாத அளவுக்குக் கடினமாக இருந்தது. அதன் பொருளை விளக்கவும் ஆரம்பித்தார். அப்பொழுது நான் சொன்னேன்: “தயவு செய்து என்னை மன்னித்துவிடுங்கள் ; இந்த
தேடல் தொடர்பான தகவல்கள்:
சத்ய சோதனை - பக்கம் 55, புத்தகங்கள், அந்த, எனக்கு, அவர், செய்து, நான், பக்கம், சோதனை, சத்ய, தர்க்கம், நாள், என்ன, அதிகமாகக், நண்பர், நானும், சிறந்த