சத்ய சோதனை - பக்கம் 500
ஆரம்ப நாட்களில் என்னுடைய சகாக்கள் விசித்திரமான வகையில் வாழ்க்கையை நடத்தி வந்தனர். இதைக் குறித்து நான் இடைவிடாமல் அவர்களைப் பரிகாசம் செய்து வந்தேன். அந்த வக்கீல்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வேலைக்காரன், ஒரு சமையற்காரன் ஆகையால் ஒவ்வொருவருக்கும் தனித் தனிச் சமையல், இரவில் நடுநிசியில் கூடச் சாப்பிடுவார்கள். அவர்கள் தங்கள் செலவுக்குத் தாங்களே ஏற்பாடு செய்துகொண்ட போதிலும், கால நேர ஒழுங்கின்றி அவர்கள் நடந்துகொண்டு வந்தது எனக்கு ஒரே கவலையாக இருந்தது. நாங்கள் மிகவும் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டதால், எங்களுக்குள் தவறான அபிப்பிராயங்கள் ஏற்பட்டுவிடும் என்பதற்கில்லை. நான் பரிகாசம் செய்ததை நல்ல உணர்ச்சியுடனேயே அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். முடிவில், வேலைக்காரர்களையெல்லாம் அனுப்பி விடுவது, எல்லாச் சமையல்களையும் ஒன்றாக்கிவிடுவது, குறிப்பிட்ட கால முறையை அனுசரிப்பது என்று ஒப்புக்கொண்டார்கள். அவர்கள் எல்லோருமே சைவ உணவு சாப்பிடுகிறவர்கள் அல்ல.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சத்ய சோதனை - பக்கம் 500, புத்தகங்கள், நாங்கள், பக்கம், சோதனை, சத்ய, பெருந்தொகை, செலவு, எங்களுக்குத், நான், ஒவ்வொருவருக்கும், பரிகாசம், மிகவும், எனக்கு, டாக்டர், வேண்டுகோள், மக்களுக்கு, சிறந்த, உறுதி, விஷயமாகவும், செய்து, எவ்வளவு, நண்பர்கள், வகையில்