சத்ய சோதனை - பக்கம் 491
முடிவாக அவர்கள் எனக்கு இந்த வாக்குறுதியை அளித்தார்கள்: “எங்களில் இத்தனை பேர் நீங்கள் சொல்கிறபடியெல்லாம் செய்யத் தயாராக இருக்கிறோம். எங்களில் சிலர், நீங்கள் விரும்பும் காலம் வரையில் உங்களுடனேயே இருப்போம். ஆனால், சிறை செல்வதற்குத் தயாராவது என்பது எங்களுக்குப் புதியதொரு விஷயம். அதற்கும் எங்களைப் பக்குவப்படுத்திக்கொள்ள முயல்கிறோம்.”
14 அகிம்சையுடன் நேருக்குநேர் |
சம்பாரண் விவசாயிகளின் நிலைமையும், அவுரித் தோட்ட முதலாளிகளுக்கு எதிராக அவர்களுக்கு இருந்த குறைகளையும் விசாரித்து அறிந்துகொள்ளுவதே என்னுடைய நோக்கம். ஆயிரக்கணக்கான விவசாயிகளை நான் சந்தித்தாக வேண்டியது இக்காரியத்திற்கு அவசியமாயிற்று. ஆனால், என்னுடைய விசாரணையை ஆரம்பிப்பதற்கு முன்னால், இவ்விஷயத்தில் தோட்ட முதலாளிகளின் கட்சி இன்னது என்பதைத் தெரிந்து கொள்ளுவதும், அந்த டிவிஷனின் கமிஷனரைக் கண்டு பேசுவதும் மிக முக்கியம் என்று கருதினேன். இவ்விருவரையும் கண்டு பேச அனுமதி கேட்டு அதையும் பெற்றேன்.
தோட்ட முதலாளிகளின் சங்கக் காரியதரிசியைக் கண்டு பேசினேன். நான் வெளியான் என்றும், தோட்ட முதலாளிகளுக்கும் அவர்களுடைய சாகுபடியாளருக்கும் இடையே தலையிடுவதற்கு எனக்கு எந்தவித உரிமையும் இல்லை என்றும் அவர் ஒளிவு மறைவு இன்றிச் சொல்லி விட்டார். ஆனால், நான் சொல்லிக்கொள்ள வேண்டியது ஏதாவது இருந்தால், அதை எழுத்து மூலம் தெரிவித்துக் கொள்ளுமாறும் என்னிடம் கூறிவிட்டார். வெளியான் என்று நான் என்னை எண்ணிக்கொள்ளவில்லை என்றும், சாகுபடியாளர்கள் தங்கள் நிலைமையைப் பற்றி நான் விசாரிக்க வேண்டும் என்று விரும்புவார்களாயின் அப்படி விசாரிப்பதற்கு எனக்கு எல்லாவிதமான உரிமையும் இருக்கிறது என்றும் அவரிடம் பணிவாகச் சொன்னேன்.
கமிஷனரையும் போய்ப் பார்த்தேன். அவர் என்னை உருட்டி மிரட்டத் தொடங்கினார். திர்ஹு த்திலிருந்து உடனே போய் விடுமாறும் அவர் எனக்குப் புத்திமதி சொன்னார்.
இவையெல்லாவற்றையும் என் சக ஊழியர்களுக்குத்
தேடல் தொடர்பான தகவல்கள்:
சத்ய சோதனை - பக்கம் 491, நான், புத்தகங்கள், அவர், தோட்ட, என்றும், பக்கம், கண்டு, எனக்கு, சத்ய, சோதனை, வெளியான், உரிமையும், என்னை, முதலாளிகளின், வேண்டியது, கேட்டார், நீங்கள், சிறந்த, என்னுடைய, மூலம்