சத்ய சோதனை - பக்கம் 473
ஆனால், ஹரித்துவார அனுபவங்கள் எனக்கு மதிப்பதற்கரிய பயன்களை அளித்தன. நான் எங்கே வசிப்பது, நான் செய்ய வேண்டியது என்ன என்பவைகளில் முடிவுக்கு வருவதற்கு அந்த அனுபவங்கள் அதிக அளவில் எனக்கு உதவியாக இருந்தன.
9 ஆசிரமத்தின் ஆரம்பம் |
கும்பமேளாவிற்காக ஹரித்துவாரத்திற்கு யாத்திரை செய்தது, நான் அந்த இடத்திற்குச் சென்ற இரண்டாவது தடவையாகும். சத்தியாக்கிரக ஆசிரமம் 1915 மே 15-ஆம் தேதி ஆரம்பமாயிற்று. ஹரித்துவாரத்திலேயே நான் தங்கி விடவேண்டும் என்று சிரத்தானந்தஜி விரும்பினார். வைத்தியநாத தாமில் தங்கிவிடலாம் என்று சில கல்கத்தா நண்பர்கள் யோசனை கூறினர். மற்றவர்களோ, ராஜ்கோட்டே சரியான இடம் என்று என்னிடம் வற்புறுத்திக் கூறினர். ஆனால் நான் அகமதாபாத் வழியாகச் சென்றபோது அங்கேயே குடியேறி விடுமாறு பல நண்பர்கள் வற்புறுத்தினர். ஆசிரமத்தின் செலவுக்கு வேண்டியதற்கும், நாங்கள் வசிப்பதற்கு வீட்டுக்கும் ஏற்பாடு செய்வதாகவும் அவர்கள் கூறினர்.
மற்ற இடங்களையெல்லாம்விட அகமதாபாத் என் மனத்திற்குப் பிடித்திருந்தது. நான் குஜராத்தியானதால் குஜராத்தி மொழியின் மூலம் நாட்டிற்கு அதிக அளவு சேவை செய்ய முடியுமென்று எண்ணினேன். மேலும் அகமதாபாத், கைத்தறி நெசவுக்குப் புராதனப் பெயர் பெற்ற இடமாகையால், கையினால் நூற்கும் குடிசைத் தொழிலுக்குப் புத்துயிர் அளிப்பதற்கு அது வசதியான இடமாக இருக்கும் என்றும் தோன்றியது. குஜராத்திற்கு அந்நகரம் தலைநகரமாகையால், மற்ற இடங்களை எல்லாம்விட அங்குள்ள பணக்காரர்கள் அதிகப் பண உதவி செய்வார்கள் என்ற நம்பிக்கையும் இருந்தது.
அகமதாபாத் நண்பர்களுடன் பல விஷயங்களையும் குறித்து விவாதித்தேன். இயற்கையாகவே தீண்டாமை விஷயத்தைப் பற்றியும் அப்பொழுது விவாதித்தேன். ஒரு தீண்டாதவர் மற்ற வகைகளில் தகுதியுடையவராக இருப்பாராயின் முதல் சந்தர்ப்பத்திலேயே அவரையும் ஆசிரமத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதையும் நான் அவர்களுக்குத் தெளிவாக எடுத்துக் கூறினேன்.
“உங்களுடைய நிபந்தனைகளையெல்லாம் திருப்தி செய்யக் கூடிய தீண்டாதார் ஒருவர் உங்களுக்கு எங்கிருந்து கிடைக்கப் போகிறார்?” என்று ஒரு வைஷ்ணவ நண்பர் கேட்டார். அப்படி
தேடல் தொடர்பான தகவல்கள்:
சத்ய சோதனை - பக்கம் 473, நான், புத்தகங்கள், அகமதாபாத், கூறினர், மற்ற, சத்ய, பக்கம், சோதனை, நண்பர்கள், இல்லை, சிறந்த, ஆசிரமத்தின், விவாதித்தேன், அதிக, எனக்கு, செய்யக், செய்ய, அந்த, அனுபவங்கள்