சத்ய சோதனை - பக்கம் 43
ஜோஷிஜி போய்விட்டார் : நானும் மனக்கோட்டைகள் கட்டலானேன்.
என் மூத்த சகோதரரின் மனம் மிகப் பரபரப்படைந்து விட்டது. என்னை அனுப்புவதற்கு வேண்டிய பணத்திற்கெல்லாம் என்ன வழி செய்வது? என்னைப் போன்ற ஓர் இளைஞனை நம்பித் தன்னந்தனியாக வெளிநாடுகளுக்கு அனுப்புவது சரியா?
என் தாயாருக்கும் ஒரே மனக்குழப்பம் ஆகிவிட்டது. என்னை விட்டுப் பிரிய அவர் விரும்பவில்லை. ஆகவே, எனக்குச் சாக்குப் போக்குச் சொல்லிவிட முயன்றார். “ இப்பொழுது சிறிய தகப்பனார்தான் நம் குடும்பத்தில் பெரியவர். அவரை முதலில் கலந்து ஆலோசிக்க வேண்டும். அவர் ஒப்புக்கொண்டால் இவ்விஷயத்தைப் பற்றி யோசிப்போம்” என்றார்.
என் சகோதரருக்கு இன்னும் ஒரு யோசனை தோன்றிற்று. அவர் என்னிடம் பின்வருமாறு கூறினார் : “போர்பந்தர் சமஸ்தானத்தினிடம் உதவியை எதிர்பார்க்க நமக்கு உரிமை இருக்கிறது. ஸ்ரீ லேலி அதற்கு நிர்வாக அதிகாரி. நம் குடும்பத்தினிடம் அவருக்கு நல்ல மதிப்பு உணடு. நமது சிறிய தகப்பனாரிடம் அவர் பிரியமாக இருக்கிறார். இங்கிலாந்தில் நீ படிப்பதற்காக உனக்கு ஏதாவது சமஸ்தான உதவி அளிக்க அவர் சிபாரிசு செய்வது சாத்தியமாகலாம்.”
இந்த யோசனை எனக்கும் பிடித்தமானதாக இருந்தது. போர்பந்தருக்கு உடனே புறப்படுவதற்குத் தயாரானேன். அந்தக் காலத்தில் ரயில் கிடையாது. மாட்டு வண்டியில் ஐந்து நாட்கள் போகவேண்டும். நான் பயங்காளி என்பதை முன்னாலேயே
தேடல் தொடர்பான தகவல்கள்:
சத்ய சோதனை - பக்கம் 43, நான், அவர், புத்தகங்கள், வேண்டும், பக்கம், சத்ய, சோதனை, உதவி, ஏதாவது, செய்வது, யோசனை, சிறிய, என்னை, பெரிய, கூறியதாவது, ஜோஷிஜி, நமது, அதற்கு, சிறந்த, இன்னும், மிகப்